தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (16.01.2015) அன்று காலை வழமையான வாராந்த கூட்டு வழிபாட்டு நேரத்தின்போது கல்லூரியின் இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வு ஏற்பாடுகளை இந்து மாமன்ற பொறுப்பாசிரியைகளான திருமதி.சங்கீதா பிரதீபன, செல்வி.சிவரூபி நமசிவாயம் ஆகியோர் வழிநடத்தியிருந்தனர்.
உழவர் திருநாளாகிய பொங்கல் விழா, உணவு உற்பத்திக்கு உதவும் பகலவனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும், விருந்தோம்பல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற உயர் பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தமிழர் பண்பாட்டு எழுச்சி விழாவாகும்.
தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் தமிழருக்கே உரித்தான தனித்துவமான பொங்கல் திருநாளை எமது எதிர்கால சந்ததியினராகிய மாணவ சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் கல்லூரியில் இவ்விழா கொண்டாடப்பட்டது.
நடராசா ஞாபாகார்த்த மண்டப முன்றலில் புதுப்பானை வைத்து பொங்கி அறுசுவை உணவு தாயாரிக்கப்பட்டு பகலவனுக்கு அர்ப்பணமாக வைக்கப்பட்டிருந்தது. ஆசியர்கள், மாணவர்கள் மண்டப முன்றலில் ஒன்று கூடி தமக்கு உணவளித்த கதிரவனை வழிபட்டு நன்றி செலத்தினார்கள்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம்.
No Responses to “தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா”