மங்கள விளக்கேற்றி வைத்து மங்களகரமாக விழாவை ஆரம்பித்து வைத்த பிரதம விருந்தினர்களான மருத்துவக்கலாநிதி இராமலிங்கம் செல்வராஜா அவரது துணைவியார் மருத்துவக்கலாநிதி சறோ செல்வராஜா, கல்லூரியின் மூத்த பழைய மாணவர்களான துறைமுக அதிகார சபையின் ஓய்வுநிலை பிரதம காசாளர் திரு.முருகேசு சின்னத்துரை அவரது பாரியார், நீதிமன்ற ஓய்வுநிலை மொழிபெயர்ப்பாளர் திரு.நமசிவாயம் அம்பலவாணர், S.P.சுப்பிரமணியம் நினைவுத் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.சுப்பிரமணியம் அரிகரன் அவரது பாரியார்
இறை வணக்கம் தமிழ்மொழி வாழ்த்து கனேடிய தேசியப் பண் ஆகியவற்றை அழகுற இசைத்த சிறுமிகளான பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், சர்மீரா ரஜீகரன்
கல்லூரிப் பண்ணுக்கு நடனத்தை அமைத்ததுடன் அதனை சிறப்புற வழங்கிய ‘நடனகலாபாரதி’, ‘நாட்டியக்கலைமணி’ செல்வி நிர்த்திகா சித்திரவடிவேல்
பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவினை மேன்மைப்படுத்தியதுடன் கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்த மருத்துவக்கலாநிதி இராமலிங்கம் செல்வராஜா அவரது துணைவியார் மருத்துவக்கலாநிதி சறோ செல்வராஜா
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விpழாவினை மேன்மைப்படுத்தியதுடன் கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்த ஓய்வுநிலை நில அளவையாளர் நாயகம் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை
தமிழகத்திலிருந்து வருகைதந்து அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கி மகழ்வித்த சுப்பர் சிங்கர் R.P.ஷ்ரவண். இவரது இசைக்கு மெருகூட்டும் வகையில் வயலின் இசைத்த வயலின் வித்துவான் ஜெயதேவன் நாயர், மிருதங்கம் வாசித்த ‘மிருதங்க கலாவித்தகர்’ ரதிரூபன் பரஞ்சோதி, கடம், தபேலா ஆகியனவற்றை வாசித்த திரு.நரேந்திரா தில்லையம்பலம்
எவ்வித சன்மானத் தொகையையும் பெற்றுக்கொள்ளாது மிருதங்கம் வாசித்த காரை மண்ணின் மைந்தன் ‘மிருதங்ககலாவாருதி’ ரதிரூபன் பரஞ்சோதி
கல்லூரியின் மேம்பாட்டிற்கான நிதி வளத்தை பெருக்கல் என்கின்ற எமது இலக்கை அடைவதற்கு அனுசரணை வழங்கி ஊக்குவித்த
Platinum அனுசரணையாளர்களான குழந்தைகள் மருத்துவ நிபுணர் மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம், தொழிலதிபர் மகாதேவன் பாலசுப்பிரமணியம, மருத்துவக்கலாநிதி இராமலிங்கம் செல்வராஐh, பொறியியலாளர் திரு.மகேஸ்வரன் பாலசுப்பிரமணியம், வீடு விற்பனை முகவர் திரு கண்ணன் நடராசா
Gold அனுசரணையாளர்களான Olympic Wood அதிபர் திரு..கருணாகரன் பஞ்சலிங்கம்(ஹரன்), பொறியியலாளர் திரு.சிற்றம்பலம் திருஞானசம்பந்தன்Texas, USA சுவிற்சலாந்து Siva Travel அதிபர் திரு.சிவா கனகசுந்தரம், பிரான்ஸ் VS.CO Cash & Carry நிறுவன அதிபர் திரு.சின்னத்துரை கோபாலகிருஷ்ணன்(சந்திரன்), பழைய மாணவன் திரு.யசோதரன் கிருபானந்தம்(லண்டன்)
Silver அனுசரணையாளர்களான வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராசா, வீடு விற்பனை முகவர் திரு.ரவி ரவீந்திரன், Andy Auto அதிபர் திரு.அன்டி திருச்செல்வம், காசிப்பிள்ளை சக புத்திரர்கள் நிறுவன அதிபர் திரு.மு.காசிப்பிள்ளை, பல்வைத்திய நிபுணர் இரு.விஜயநாதன், நலன்விரும்பி திரு.கணபதிப்பிள்ளை சிவபாதசுந்தரம், karainews.com இணையத்தளத்தின் தொகுப்பாளர் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்
இம்மலரில் இடம்பெற்ற கட்டுரையை எழுதி உதவிய பேராசிரியர் இ.பாலசுந்தரம், மறு பிரசுரம் செய்திருந்த கட்டுரைகளை வழங்கி உதவிய கலாநிதி த.ரவிச்சந்திரன் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வழங்கி ஊக்குவித்த கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் உள்ளிட்ட அனைத்து அன்பர்களுக்கும்
இச்சிறப்பு மலரினை அழகுற வடிவமைத்த திரு.மா.கனகசபாபதி, அழகுற அச்சிட்ட Graphicland அச்சகம்
விளம்பர அனுசரணை வழங்கி ஆதரவளித்த வர்த்தகப் பெருமக்கள், மலரின் பக்கம் ஒன்றினை பொறுப்பேற்றுக்கொண்டு வாழ்த்தி ஆதரவளித்த பழைய மாணவர்கள்
இலவசமாக புகைப் படங்கள் எடுத்து உதவிய K.K.Electronics நிறுவனத்தின் திருமதி மலர் குழந்தைவேலு
வீடியோ படப்பிடிப்பிற்கான கொடுப்பனவின் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்க முன்வந்த K.K.Electronics நிறுவன அதிபர் திரு.பொன்னம்பலம் குழந்தைவேலு
துல்லியமான ஒலி அமைப்பினை ஏற்படு;த்தி ஒத்துழைத்த திரு.யதுநந்தன்
மண்டப ஏற்பாடுகளில் ஒத்துழைத்து உதவிய ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய நிர்வாகம், நிகழ்வில் பணியாற்றிய தொண்டர்கள்
நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு ஆதரவளித்ததுடன் விழாவிலும் கலந்துகொண்டு கல்லூரி அன்னையைப் பெருமைப்படுத்திய பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள்
வுpளம்பரம் செய்ததுடன் ஷ்ரவணை நேர்காணல் செய்து விழாவின் ஏற்றத்திற்கு உதவிய East Tamil FM வானொலி மற்றும் CTR வானொலி நிறுவனம் விசேடமாக CTR அறிவிப்பாளர் T.S.கோகுலன்
சமூக அறிவித்தல் பகுதியில் எமது விளம்பர அறிவித்தலை ஒலிபரப்பி ஆதரவளித்த வானொலி மற்றும் தொலைக் காட்சி நிறுவனங்கள்
விழா தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் தமது ‘கனடா உதயன்’ பத்திரிகையில் பிரசுரித்து ஆதரவளித்த அதன் பிரதம ஆசிரியர் திரு.லோகேந்திரலிங்கம்
வுpழா நிகழ்ச்சிகளை அழகுறத் தொகுத்து வழங்கிய திரு.பா.ஞானபண்டிதன்
மேற்குறித்த நன்றிக்குரிய உள்ளங்களின் பட்டியலில் எமக்கு உதவிய எவராவது விடுபட்டிருந்தால் அவர்கள் அதனை பெருமனத்துடன் மன்னித்துக்கொள்வார்கள் என நம்புவதுடன் மீண்டும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகின்றோம்.
நிர்வாகம், பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் 5வது ஆண்டு விழா சிறப்புற்று விளங்க உதவிய நல்லுள்ளங்களுக்கு சங்க நிர்வாகம் சிரம் தாழ்த்தி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றது”