தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்ற பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.கனகரட்ணம் சிவபாதசுந்தரம் கல்லூரிக்குப் பயணம் செய்து அதனைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் கல்லூரியின் அபிவிருத்தி, சங்கத்தின் உதவிகள் என்பன குறித்து அதிபர் திருமதி.சிவந்தினிp வாகீசனுடன் கலந்துரையாடினார். பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் வலந்தலைச் சந்திக்கு அருகாமையில்; கொள்முதல் செய்யப்பட்ட நிலத்தை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் அண்மையில் எடுத்திருந்ததும் அவர்களை அந்நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு பாடசாலை நிர்வாகமும் தாய்ச் சங்கமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இவை தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பன குறித்து திரு.சிவபாதசுந்தரம் அதிபரிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டார். இந்நிலத்தை விரைவில் கடற்படையினர் விடுவித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அதிபர் இக்கலந்துரையாடலின்போது வெளியிட்டிருந்ததுடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இது தொடர்பில் காட்டிவருகின்ற அக்கறைக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
திரு.சிவபாதசுந்தரமும் அவரது துணைவியாரும் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனுடனும் ஆசிரியர்களுடனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினர் சிவபாதசுந்தரம் கல்லூரிக்குப் பயணம் செய்து அதிபருடன் கலந்துரையாடினார்”