கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு குறித்து கல்லூரி சமூகமும் புலம்பெயர் பழைய மாணவர்களும் விழா கொண்டாடி கல்லூரி அன்னையைப் பெருமைப்படுத்தி வருவதுடன் கல்லூரிச் சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களிலும் பங்குபற்றி வருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவில் வாழும் பெயர் குறிப்பிட விரும்பாத பழைய மாணவர் ஒருவர் கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கலாநிதி ஆ.தியாகராசா, உயர் நீதிமன்ற நீதியரசர் ந.நடராசா கே.சி ஆகியோரின் திருவுருவப் படங்களை புனரமைப்புச் செய்யத் தேவையான நிதியினை வழங்கி உதவியுள்ளார்.
அத்துடன் அதே அன்பர் நடாராசா ஞாபாகார்த்த கலை அரங்கிற்கு முன்புறத்திலும் பின் புறத்திற்கும் வேண்டிய அழகிய நீல, சிவப்பு வர்ண திரைச்சேலைகளையும் அன்பளிப்பு செய்துள்ளார்.
மேற்படி திருவுருவப் படங்கள் சீரான முறையில் செப்பனிடப்பட்டு அழகிய வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு மண்டபத்தின் உட்புறத்தில் அரங்கின் இரு மருங்கிலும் வைக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிககின்றன.
கல்லூரியின் வெள்ளி விழா அதிபர் அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா M.A. M.Lit (Later. Ph.d)அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக உயர்நீதிமன்ற நீதிபதியாகவிருந்த அமரர் நமசிவாயம் நடராசா K.C அவர்களின் நினைவாக அவரது துணைவியார் திருமதி தங்கம்மா நடராசா அவர்களினால் 1950 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நடராசா ஞாபகார்த்த மணடபம் அக்காலகட்டத்தில் மந்திரியாகவிருந்த கௌரவ இராஜபக்ச அவர்களினால் திறந்துவைக்கப்பட்டதுடன் அமரர் நடராசா அவர்களின; உருவப்படம் அந்நாள் இலங்கை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஜவர் ஜென்னிங்ஸ் என்பவரால் திரை நீக்கம் செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அவற்றின் படங்களை இங்கே காணலாம்.
No Responses to “நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கலாநிதி ஆ.தியாகராசா, நீதியரசர் ந.நடராசா கே.சி ஆகியோரின் திருவுருவப் படங்கள் புனரமைக்கப்பட்டதுடன் அரங்கிற்கு புதிய திரைச்சேலையும் அன்பளிப்பு”