பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது சங்கத்தின் உப-தலைவராக பதவி வகித்த திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகால தலைவராக பதவி வகித்து சிறந்த பணியாற்றி அனைவரதும் பாராட்டிற்கும் நன்றிக்குமுரியவராக விளங்கும் தம்பிராசா மாஸ்டர் அவர்களின் மறைவையடுத்து ஏற்பட்டிருந்த தலைவர் பதவிக்கான வெற்றிடத்திற்கே திரு.அம்பிகைபாகன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
‘அம்பிகைபாகன் மாஸ்டர்’ என காரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்ட காரைநகர் களபூமியைச் சேர்ந்த திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் நீண்டகாலம் ஆசிரியப் பணியாற்றி திறமைமிக்க ஆசிரியர் என்கின்ற பெயரினைப் பெற்றவர் என்பதுடன் கொழும்பு வலயக் கல்விப் பணிமனையில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளையின் தலைவராக திரு.தம்பையா அம்பிகைபாகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.”