போரினால் தாய் தந்தையரை இழந்த மற்றும் வேறு காரணங்களினால் தாய் தந்தையரின் பராமரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அநாதைக் குழந்தைகளை பராமரிப்பதற்கு சித்தங்கேணியிலும் முல்லைத்தீவிலும் இரு இல்லங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவ்வில்லங்களிலுள்ள அநாதைக் குழந்தைகளின் கல்வியினை விருத்திசெய்யும்வகையில் கனடாவிலிருந்து பணியாற்றும் பிரணவம் நிதியம் உதவிவருகின்றது.
அண்மையில் ஸ்காபுரோவில் நிகழ்ந்த பெரு விபத்தொன்றில் அமரத்துவமடைந்த பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு.கனகசபாபதியின் மனைவியும் சங்க உறுப்பினருமாகிய அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் ஞாபகார்த்தமாக சங்கம் எழுபத்தைந்து டொலர்களை பிரணவம் நிதியத்திற்கு வழங்கியுள்ளது.
அமரர் மனோரஞ்சனாவின் இறுதி வணக்க நிகழ்வில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்ய செலவுசெய்யப்படும் பணத்தை அநாதைக் குழந்தைகளிற்கு உதவிவரும் பிரணவம் நிதியத்திற்கு வழங்கி உதவலாம் என்று அன்னாரின் குடும்பத்தினர் வேணடுகோள் விடுத்திருந்தனர். அவ்வேண்டுகோளை சங்க நிர்வாகம் கருத்தில்கொண்டு மனிதநேயத்துடன் செயற்பட்ட அன்னாரது விருப்பத்தையும் அவர்தம் குடும்பத்தினரின் விருப்பத்தையும் நிறைவுசெய்துள்ளது.
பிரணவம் நிதியம் பற்றிய மேலதிக தகவல்களிற்கு: www.pranavam.org
No Responses to “அநாதை குழந்தைகளிற்கு உதவிவரும் பிரணவம் நிதியத்திற்கு (Pranavam Foundation) அமரர் மனோரஞ்சனா ஞாபகார்த்தமாக பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிதியுதவி”