கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு; பாடசாலை சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களிற்கு பழைய மாணவர்களிடமிருந்தும் நலன் விரும்பிகளிடமிருந்தும் உதவிகோரி விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளினை ஏற்று கனடாவிலுள்ள பழைய மாணவர்கள் பல திட்டங்களை பொறுப்பேற்றுக்கொண்டும் இயன்ற நன்கொடைகள் வழங்கியும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஊடாக உதவி வருகின்றனர்.
முன்னாள் ஆங்கில ஆசிரியரான திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்(பொன்னம்பலம் மாஸ்டர்) அவர்களும் அவரது குடும்பத்தினரும் இவ்விதம் உதவிசெய்து வருவோர் வரிசையில் தம்மையும் இணைத்துக்கொண்டுள்ளனர்.
தமது குடும்ப உறுப்பினர்களாகவிருந்து அமரத்துவமடைந்துவிட்ட அன்பழகன, அருளழகன் ஆகியோரது நினைவாக இசை, ஓவியம் ஆகியவற்றின் கற்றல், கற்பித்தல் மேம்பாட்டடிற்கு உதவும் வகையில் ஜம்பதினாயிரம் ரூபாவினை வருடாந்தம் வழங்க முன்வந்துள்ளளதுடன் இவ்வாண்டுக்குரிய உதவுதொகை 50,000 ரூபாவினையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.
அமரர் அன்பழகன அமரர் அருளழகன் அகிய இருவரும் கல்லூரியில் பயின்ற காலத்தில் முறையே ஓவியம, இசை ஆகியவற்றில் பிரகாசம் பெற்று விளங்கி சாதனைபடைத்து வந்ததை கருத்திற்கொண்டு மேற்குறித்த துறைகளின் வளர்ச்சிக்கு உதவ பொன்னம்பலம் மாஸ்டர் குடும்பத்தினர் தீர்மானித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களாகவுள்ள பொன்னம்பலம் மாஸ்டரும் அவரது இரு பிள்ளைகளான திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் திரு.பொன்னம்பலம் வெற்றிவேல் ஆகியோரும் சங்கத்துடன் நெருக்கமாக தம்மை இணைத்துக்கொண்டு சங்க வளர்ச்சியூடாக கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததேயாகும்.
திரு.பொன்னம்பலம் குடும்பத்தின் கல்லூரி மீதான விசுவாச உணர்வினையும் கல்லூரியின் மேம்பாட்டிற்கு உதவிவருவதையும் பாடசாலைச் சமூகம் பாராட்டி நன்றி தெரிவிக்கின்றது.
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு அமரர் பொன்னம்பலம் அன்பழகன் அமரர் பொன்னம்பலம் அருளழகன் ஆகியோரின் நினைவாக வருடாந்தம் 50,000 ரூபாவினை வழங்க குடும்பத்தினர் தீர்மானம்”