காரைநகர், நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து பின்னர் கொழும்பில் வசித்து வந்தவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் 22 ஆண்டுகளிற்கு மேலாகப் பணியாற்றிப் புகழ்பெற்ற ஆசிரியராக விளங்கிய அமரர் நாகலிங்கம் மாஸ்டர் அமரர் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும் கல்லூரியின் இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அவர்களின் அன்பு மாமனாரும் கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரராகவும் உதை பந்தாட்ட அணியின் முன்னிலை வீரராகவும் விளங்கி கல்லூரியின் புகழுக்கு வலுச் சேர்த்தவருமாகிய திரு.சிவபாலன் அவர்கள் நேற்றைய தினம் 02-06-2018 சனிக்கிழமை கொழும்பில் சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”