கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் 125 ஆண்டுகள் கடந்து இன்றும் தளர்விலாது எமது மண்ணிற்கு ஒப்பற்ற கல்விச் சேவையை வழங்குகின்றது என்றால் மிகையாகாது. இக்கல்லூரிக்கு வித்திட்ட பெருமகான் முத்து சயம்பு அவர்களையும், கல்லூரி கடந்து வந்த வளர்ச்சிப் பாதையிலே இவ் ஒப்பற்ற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, கல்லூரிக் காலத்தில் தம் தடங்களைப் பதித்த ஆளுமைமிக்க நல்லதிபர்களையும், ஒளிதீபங்களாக விளங்கிய நல்லாசான்களையும், நலன்விரும்பிகளையும், கல்லூரித்தாய்க்கு பெருமை சேர்த்த பேராற்றல் மிக்க பழைய மாணவர்களையும் இச்சமயத்திலே நினைவு கூர்ந்து வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் என்று அதிபர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதிபரின் முழுமையான வாழ்த்துச் செய்தியை இங்கே தருகின்றோம்.
கனடா பழைய மாணவர் சங்கம் நிகழ்த்தும் கல்லூரித்தாயின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா
கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தி
இன்றைய விழாவைத் தலைமை தாங்கி நிகழ்த்திக் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய எனது ஆசானும் கனடா பழைய மாணவர் சங்கத் தலைவருமான உயர்திரு த. அம்பிகைபாகன் அவர்களே, விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் பேராசிரியர், கலாநிதி தி.சிவகுமாரன் அவர்களே, சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் மருத்துவ கலாநிதி வி.விஐயரத்தினம் அவர்களே, கௌரவ விருந்தினராகக் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் கனடா காரை கலாசார மன்றத் தலைவர் திரு.த. பரமானந்தராசா அவர்களே, கனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு கனக சிவகுமாரன் அவர்களே, கனடா பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களே, இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் கல்லூரியின் பெருமதிப்பிற்குரிய முன்னைநாள் ஆசிரியர்களே, எம் கல்லூரியின் பெருமைமிகு பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே உங்கள் அனைவருக்கும் எம் கல்லூரி சார்பாக வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடைகின்றேன்.
எம்கல்லூரி 125 ஆண்டுகள் கடந்து இன்றும் தளர்விலாது எமது மண்ணிற்கு ஒப்பற்ற கல்விச் சேவையை வழங்குகின்றது என்றால் மிகையாகாது. இக்கல்லூரிக்கு வித்திட்ட பெருமகான் முத்து சயம்பு அவர்களையும், கல்லூரி கடந்து வந்த வளர்ச்சிப் பாதையிலே இவ் ஒப்பற்ற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, கல்லூரிக் காலத்தில் தம் தடங்களைப் பதித்த ஆளுமைமிக்க நல்லதிபர்களையும், ஒளிதீபங்களாக விளங்கிய நல்லாசான்களையும், நலன்விரும்பிகளையும், கல்லூரித்தாய்க்கு பெருமை சேர்த்த பேராற்றல் மிக்க பழைய மாணவர்களையும் இச்சமயத்திலே நினைவு கூர்ந்து வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன்.
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’
என்ற வள்;ளுவர் வாக்கிற்கிணங்க இக்கல்லூரியிலே கற்றுத் தேர்ந்து கல்லூரிக்கு பெருமை சேர்ப்பது மட்டுமன்றி, கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களாகிய உங்கள் அனைவரதும் நன்றியுணர்வுமிக்க சேவையைப் பெரிதும் மதிக்கின்றேன்.
நீங்கள் அனைவரும் ஒன்று கூடி காரை இந்துவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நாடுவிட்டு நாடுகடந்தாலும் உங்கள் கல்விக் கண்களைத் திறந்து அறிவொளியூட்டிய அன்னையின் வளர்ச்சிக்காக கனடாவிலே பழைய மாணவர் சங்கம் ஒன்றை உருவாக்கி நீங்கள் வழங்கிவரும் ஒப்பற்ற சேவையை நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றேன்.
கனடாவிலே பழைய மாணவர் சங்கம் உருவாகிய பின்னர் எம் கல்லூரி பௌதிகவள விருத்தி மட்டுமன்றி இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும், பாடவிதான செயற்பாடுகளிலும் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. இதற்காக பலலட்சம் ரூபாய்களை நீங்கள் அனைவரும் இணைந்து வழங்கியுள்ளீர்கள். அவ்வகையில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பாடசாலைச் சமூகத்தின் சார்பிலே இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக கல்லூரித்தாயின்; புகழை உலகெங்கும் எடுத்தியம்ப நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி கனடாவிலும் யாஃகலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125ஆவது ஆண்டு விழரவைக் கொணடாடுவதில் பெருமகிழ்வடைகின்றேன். இவ்விழா சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரப் பெருமானின் பாதார விந்தங்களை வேண்டி அமைகின்றேன்.
இச்சந்தர்ப்பத்தில் எனக்கும்; வாழ்த்துச் செய்தி வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய விழாக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி.
திருமதி வாசுகி தவபாலன்
அதிபர்
யாஃகலாநதி ஆ.தியாகராசா ம.ம.வி.
(கல்லூரிச் சமூகம் சார்பாக)
No Responses to “கனடா பழைய மாணவர் சங்கம் நிகழ்த்தும் கல்லூரித்தாயின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தி”