காரைநகரில் பிரசித்திnpபற்ற சட்டத்தரணி ஏ.வி.குலசிங்கம், நீதிபதி கே.சி.நடராசா, அப்புக்காத்து சுப்பிரமணியம் போன்றர்கள் பிறந்த காரை. களபூமி மண்ணில் பிறந்த முருகேசு தர்மராசா சாதனை படைத்த சட்ட ஆலோசகரர் ஆவார். இவர் 31-05-2018 அன்று கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்;த கவலை அடைந்தோம்.ஒரு நொத்தாரிசாக தனது சட்டத்துறைப் பணியை ஆரம்பித்து தமது சுயமுயற்சியால் சட்டத்துறை ஆலோசகராக உயர்வு பெற்றார். சட்டக் கல்லுரி சென்று படியாது விட்டாலும் சட்டத்துறையில் பெயர் பெற்ற திரு.கனகநாயகம், திரு.சிவஞானம, திரு.குமார் பொன்னம்பலம, திரு. கனகேஸ்வரன, நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களின் நெருங்கிய தொடர்பால் உயர் நிலைபெற்ற சட்ட ஆலோசகராக விளங்கினார்.
சுட்டத்துறைச் சட்டங்களை மனதில் வைத்து உடன் ஆலோசனை சொல்லக்கூடிய வல்லவராக விளங்கினார்.
சாதாரண மக்கள் விரும்பிச் செல்லும் சட்ட ஆலோசகராக சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு பிரசித்தி பெற்ற சட்டத்தரணிகளினால் பாராட்டப்பட்டவர்
இவர் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். அங்கு படிக்கும் காலத்தில் விவாத்தில் ஈடுபட்டு பாராட்டும் பெற்றவர். சட்டக் கல்லூரிக்குச் செல்லாது சட்டத்துறையில் திறமைபெற்ற ஆலோசகராக விளங்கியது காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையாகும்.
சுhதாரண மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட சட்ட ஆலோசகர் தர்மராசா அவர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் துரிதமான சட்ட ஆலோசகராக செயற்பட்டார்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் தமிழை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். தமிழச் சங்கப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். தான் தேடிவைத்த நூல்களை தமிழ்ச் சங்க நூல்நிலையத்திற்கு வழங்கி அதன் வளர்ச்சிக்கு உதவினார். தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாக்களில் தவறாது பங்கு கொண்டு எழுத்தாளர்களுக்கு நிறைவாக அன்பளிப்பு வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். தமிழ்ச் சங்கத்தில் கொண்ட பற்றினால் அடிக்கடி சங்கத்திற்கு சென்று வருவார்.
காரைநகரில் பிரசித்திபெற்ற சட்டத்தரணி ஏ.வி.குலசிங்கம் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். அதனால் தமிழ்ப் பற்றாளர் சட்டத்தரணி கோடீஸ்வரன் அவர்களுடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்பைப் பெற்றவர். ஒருவருடத்திற்கு முன்னர் திரு.தர்மராசாவை வெள்ளவத்தையில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது பிரசித்திபெற்ற சட்டத்தரணி ஏ.வி.குலசிங்கம் பற்றி “நான் ஒரு நூல் தயாரித்து வருகிறேன்” என்று கூறியபோது தானும் அவர் பற்றிய தகவல்கள் திரட்டிவருவதாக ஆர்வத்துடன் குறிப்பிட்டார். பின்னர் ஒருமுறை சந்தித்த போது தனது நண்பர் இந்நூலை வெளியிடவுள்ளார் எனச் சொன்னபோது பெரும் மகிழ்சியடைந்தேன். அந்த நூலை யார் வெளியிட்டார் என்று அறிந்து கொள்வதற்கு முன் காலன் அவரை அழைத்துச் சென்று விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அந்நூலை அவர் நினைவாக வெளியிடுவோம்.
கௌரவ ஜீ..ஜீ பொன்னம்பலம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியலை நடத்திவந்தவர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரையும் இக்கட்சியில் ஈடுபட்டு உழைத்துவந்தவர்.
ஐ.தி.சம்பந்தன்
களபூம் காரைநகர்
No Responses to “காரை.இந்துவிற்கு பெருமை சேர்த்த சட்ட ஆலோசகர் முருகேசு தர்மராசா”