எமது கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவரும், எம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று அறிவுப் பெட்டகமும் ஆகிய தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் 98 ஆவது அகவையில் கால் பதிக்கும் இவ்வேளையில்; கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் குருக்கள் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகின்றது.
நன்றும்நீ தமிழ்ததாயை நெஞ்சி ருத்தி
நாளெலாம் அவள்பணியை நயந்து செய்வாய்
ஒன்றல்ல இரண்டல்ல பலவேயாகும்
உத்தமநீ பதிப்பித்த நூல்கள் நீளும்
குன்றாத அன்புடையாய் குருவே ஐயா
கூறுகின்ற கருணையுன்றன் பாலே காண்போம்
என்றும்நீ இளமையுடன் இருக்க வேண்டி
இறைதாளைத் தொழுகின்றோம் வாழி வாழி
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் 20 ஆண்டுகள் விஞ்ஞான விளையாட்டுத்துறை ஆசிரியராகக் சேவை செய்த திரு.அ.சோமாஸ்கந்தன் அவர்களின் மணிவிழா வைபத்தை கல்லூரி மாணவர்கள் நடத்தியபோது அவர்களின் சார்பாக மூதறிஞரும் காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான பண்டிதமணி, சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் ஆசிரியருக்கு அன்பளிப்பு வழங்குவதைப் படத்தில் காணலாம்.
நன்றி: வைத்தீசுவரர் மலர்-2001
தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் எண்பத்தைந்து அகவை நிறைவெய்தியதை முன்னிட்டு அவர்களின் பணிகளைப் பாராட்டி எமது கல்லூரியின் பழைய மாணவரும் கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவருமாகிய சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு ‘வைத்தீசுவரர் மலர்’ கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கனடாவில் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No Responses to “எமது கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவர் தத்துவக் கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், மூதறிஞர், பண்டிதமணி சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்தி வணங்குகின்றது”