காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகம் பாடசாலையின் நிர்வாகத்துடனும் தாய்ச் சங்க நிர்வாகத்துடனும் நெருக்கமான தொடர்பினைப் பேணி வருகின்றமை யாவரும் அறிந்ததேயாகும்.
தனிப்பட்ட பயணத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுவரும் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கல்லூரிக்கான பயணத்தினை மேற்கொண்டு அதனைத் தரிசிப்பதுடன் அதிபருடனும் தாய்ச் சங்க நிர்வாகத்துடனும் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்த விடயங்கள் குறித்து அளவளாவி வருகின்ற வரிசையில் சங்கத்தின் உப-பொருளாளர் திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் அண்மையில் கல்லூரிக்குப் பயணம் செய்து அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், உப-அதிபர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகயோரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் வலந்தலைச் சந்திக்கு அருகாமையில் கொள்முதல் செய்யப்பட்ட நிலத்தை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் அண்மையில் எடுத்திருந்தமையும் அவர்களை அந்நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்கு பாடசாலை நிர்வாகமும் தாய்ச் சங்கமும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இவை தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றம் என்பன குறித்தும் இச்சந்திப்பின்போது திரு.பிரகலாதீஸ்வரன் கேட்டறிந்து கொண்டார். இந்நிலத்தை விரைவில் கடற்படையினர் விடுவித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அதிபர் இக்கலந்துரையாடலின்போது வெளியிட்டிருந்தார்.
அத்துடன் குறிப்பாக கல்லூரியின் உயர்தரப்பிரிவு கற்கைநெறி வகுப்புகள் பற்றிய தற்போதய நிலை, உயர்தர வகுப்பு மாணவர் தொகை, மற்றும் கல்விச் செயற்பாடுகள், ஆளணி வளம் என்பன பற்றியும் திரு.பிரகலாதீஸ்வரன் அதிபருடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவிப் பொருளாளர் திரு.பிரகலாதீஸ்வரன் கல்லூரிக்குப் பயணம்”