பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் ஆறாவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை (30.06.2018) அன்று முற்பகல் 9:30 இற்கு கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் புதிய நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
கடந்த 25.06.2018 அன்று விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் கடைசி நாளாகும். இந்தநிலையில் தேர்தல் அலுவலர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற போட்டியிட விரும்புவோரின் பெயர்ப்பட்டியல் கீழ்வருமாறு:
தலைவர்: நாகலிங்கம் குஞ்சிதபாதம்
உப-தலைவர்: திருமதி செல்வா இந்திராணி சித்திரவடிவேல்
உதவிச் செயலாளர்: திருமதி அனுசூயா ஞானகாந்தன்
பொருளாளர்: திரு. மாணிக்கம் கனகசபாபதி
உதவிப் பொருளாளர்: திரு.திருவேங்கடம் சந்திரசோதி
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திருமதி பிரபா ரவிச்சந்திரன்
திரு. செல்வரத்தினம் சிவானந்தன்
திரு. சிவபாதசுந்தரம் கனகரட்ணம்
திரு.நமசிவாயம் அம்பலவாணர்
விண்ணப்பிக்காத பதவிகளுக்கான உறுப்பினர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக பொதுக்கூட்டத்தில் சமூகமளித்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்படுவர்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தோர் விபரம்”