பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கம் காரை.இந்துவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்ற அமைப்பாகும். இச்சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தனிப்பட்ட பயணமாக தாயகம் செல்லும்போதெல்லாம் கல்லூரிக்கு தவறாது சென்று அதன் அபிவிருத்தி சார்ந்து பாடசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடி வருகின்றனர். அந்த வரிசையில் இச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவரும,; முன்னாள் பொருளாளரும், தற்போதய நிர்வாகசபையின் உறுப்பினருமாகிய திரு.பொன்னையா ஞானானந்தன் சென்ற 15-02-2023 அன்று பாடசாலைக்குச் சென்று அதனைச் சுற்றிப் பார்வையிட்டதுடன் உப-அதிபர் திருமதி அரூபா ரமேஸ் அவர்களுடனும் கலந்துரையாடியிருந்தார். ஞானானந்தன் அவர்களும் அவரது துணைவியாரான மருத்துவகலாநிதி திருமதி ஞானானந்தன் அவர்களும் பாடசாலைக்குச் சென்றிருந்தபோது பூரணகும்பம் வைத்து மாலை அணிவித்து கல்லூரிச் சமூகத்தினால் வரவேற்கப்பட்டிருந்தனர். பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் செயலாளரான திரு.பரமநாதர் தவராசா அவர்களும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
பிரித்தானியா புகையிரதப் பகுதியில் பொறியியலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு.ஞானானந்தன் அவர்கள் தொண்டு நிறுவனமான(Charity Organization) பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்துக்கும் பிரித்தானியா தொண்டு ஆணையகத்துக்கும் (Charity Commission) இடையிலான விடயங்களை கையாண்டு ஆலோசனைகள் வழங்கி வருகின்ற முக்கியமான உறுப்பினராவார். மிகுந்த ஊர்ப்பற்றாளரான இவர் விளானை, களபூமியைச் சேர்ந்தவராவார்.
இவரது பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர் பொன்னையா ஞானானந்தன் அவர்கள் காரை.இந்துவுக்கு பயணம்.”