கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய நூலகத்தில் 1962ஆம் ஆண்டு முதல் ஜந்து ஆண்டுகளாக நூலகராக சிறப்பான பணியாற்றியவரும் காரைநகர் இலந்தைச்சாலையை பிறப்பிடமாகக் கொண்டவருமாகிய திருமதி தேவமங்கை பாலச்சந்திரன் 09-10-2013 புதன்கிழமை கொழும்பு வெள்ளவத்ததையில் காலமானார்.
அன்னார் யாழ்ப்பாணம் கட்டிடத்திணைக்கள அதிகாரியாக பணிபுரிந்த அமரர்.பாலச்சந்திரனின் மனைவியும் லண்டனில் பொறியியலாளராக பணியாற்றும் தேவபாலன் விரிவுரையாளராக பணியாற்றும் கலாநிதி அனுசா ஆகியோரின் தாயாரும் ஆவார்.
கல்லூரியின் வெள்ளி விழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் காலத்தில் நூலகராகப் பணியாற்றிய திருமதி தேவமங்கை, கல்லூரியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னிலைவகித்து பங்குகொண்டு வந்ததன் மூலம் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகுந்த ஒத்துழைப்பாக இருந்து வந்தார்.
ஆசிரியர்கள் எவராவது சமூகமளிக்காத நாட்களில் அவர்களின் பாடங்களை கற்பித்து வந்தவர் என்ற வகையில் தேவமங்கை ரீச்சர் எனவும் அழைக்கப்பட்டு வந்தவர். இவரது காலத்தில் மாணவர்கள் நூலக சேவையினால் அதிக பயன்பெற்று வந்தனர்.
கல்லூரி மீது மிகுந்த விசுவாசம்கொண்டு அதன் வளர்ச்சியில் அதிக கரிசனையுடன் செயலாற்றி வருகின்ற குடும்பத்திலிருந்து வந்த திருமதி தேவமங்கை கல்லூரியின் பிரபல்யம் மிக்க சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமரர் வேலுப்பிள்ளை (ஜயம்பிள்ளை மாஸ்டர்) அவர்களின் புத்திரியும் ஆவார்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக முன்னர் பதவி வகித்தும் தற்போதய நிர்வாகத்தில் அங்கம்பெற்றும் கல்லூரி வளர்ச்சிக்கு உழைத்து வருகின்ற திரு.வே.சபாலிங்கம் அவர்களின் சகோதரியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல சமய சமூக பணிகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு செயலாற்றிவரும் திரு.சபாலிங்கம் கலாநிதி ஆ.தியாகராசா ஞாபகார்த்தஅறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருமதி தேவமங்கை பாலச்சந்திரனின் மறைவிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தனது ஆழ்ந்த துயரத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது இழப்பினால் பெரும் துயருற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களிற்கு ஆறுதலையும் கூறிக்கொள்கின்றது.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய முன்னாள் நூலகர் திருமதி தேவமங்கை பாலச்சந்திரனின் மறைவிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை அநுதாபம்”