தீவக கல்வி வலயத்தின் காரைநகர்க் கோட்டப் பாடசாலைகளுக்கான முதலாவது அறநெறி வகுப்பின் தொடக்க நிகழ்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞபகார்த்த மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(13.07.2018) அன்று பி.ப 3.00 மணிக்கு தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திருமதி ம. நிறைஜா அவர்களும் தீவக லலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு ஆ. யோகலிங்கம் அவர்களும்; காரைநகர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும் அயற்பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
அன்றைய தினம் மாணவ, மாணவிகள் தமிழர் பண்பாட்டு உடையணிந்து பாடசாலைக்கு வருகை தந்து நிகழ்வில் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அறநெறிப் பாடசாலை என்பது வாழ்க்கைக்கான சைவநெறி சார்ந்த அறவொழுக்கங்களைப் கற்பிக்கும் பாடசாலைகள் ஆகும்.
இலங்கையில் இந்து சமய, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட கோயில்கள் மற்றும் சமய நிறுவனங்கள் இவற்றை நடத்தி வருகின்றன. இப்பாடசாலை மாணவர்கள் சைவசமய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் சமய ஆசாரங்களைக் கடைப்பிடிக்கவும் தூண்டப்படுகின்றார்கள்.
தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “அறநெறி வகுப்புக்களுக்கான தொடக்க விழா நிகழ்வு”