காரை மண்ணில்; வரலாற்றுச் சாதனைகள் பல படைத்துவரும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் தனது 125 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2012ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.
இந்நன்னாளிலே மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவிக்க, பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் வடமாகாண கல்விப்பணிப்பாளர் உயர்திருவ. செல்வராசா அவர்களேஇசிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள மேலதிகமாகாணக் கல்;விப்பணிப்பாளர் உயர்திரு. ஆ.இராஜேந்திரம் அவர்களேஇகௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் தீவக வலயக்; கல்விப்பணிப்பாளர் உயர்திரு. தி.ஜோன்குயின்ரஸ்அவர்களே, வைத்திய கலாநிதி வி. விஐயரட்ணம் அவர்களே,
தீவக வலயக்கல்விப்பணிமனையைச் சார்ந்த
பிரதிக்கல்விப்பணிப்பாளர்களே,
உதவிக்கல்விப்பணிப்பாளர்களே,
ஆசிரிய ஆலோசகர்களே
அயற்பாடசாலைகளின் அதிபர்களே, ஆசிரியர்களே
பாடசாலை அபிருத்திச்சங்க உறுப்பினர்களே
பாடசாலை அபிருத்திக்;குழு உறுப்பினர்களே
எமது பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர்களே
பழையமாணவர் சங்க உறுப்பினர்களே
பெற்றோர்களே, நலன்விரும்பிகளே
எனது அன்பான ஆசிரியர்களே கல்விசாரா ஊழியர்களே
அன்புநிறை மாணவச்செல்வங்களே,
உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய வணக்கங்களைக் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
125 ஆண்டுகளைக்கடந்து ஆய்ந்து புனைந்த நல்லறிவை நாள்தோறும் புகட்டும் இக் கல்லூரிஇன்று புதுப் பொலிவுடன் பூரித்துக்கம்பீரமாகக் காட்சி தருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது இவ்வேளையில் அறிவொளி பரப்பும் எமதன்னையின் உடைக்க முடியாத உறவுப்பாலத்தைப் புதுப்பிக்கவருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும்இருகரம் கூப்பிவரவேற்பதில் மட்டற்ற மகிச்சியடைகின்றேன்.
காரைநகரின்; கலங்கரை விளக்காக தலை சிறந்து விளங்கும் இக்கல்லூரியானது 125 ஆண்டுகள் கல்விச் சேவையைப் பூர்த்தி செய்து நிற்கும் இத்தருணத்தில் 2012ம் ஆண்டிற்கான அதிபர் அறிக்கையினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைய பரிசளிப்பு நன்னாள். கல்லூரி வரலாற்றின் பொன்னாள.; எமது கல்லூரி பண்பாட்டினதும் அறிவுத்திறனினதும் நிலைக்களனாக விளங்கும் உன்னத நாள். இன்றைய பரிசளிப்பு விழாவில் எமது மாணவச்செல்வங்களுக்கு பரிசில்களை வழங்கிப்பாராட்ட இங்கு வருகை தந்திருக்கும்; வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் உயர்திருவ. செல்வராசா அவர்கள்; முதன்மை விருந்தினராக வருகை தந்தமையால் கல்லூரி அன்னை பெருமையும் மகிமையும் அடைகின்றாள.;போராதனைப் பல்கலைக்கழகத்தில் வணிகமானிப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானிப்பட்டத்தையும் பெற்றுக் கொண்ட தாங்கள் ஆசிரிய தொழிலிருந்த நாட்டம் காரணமாக 1981ம் ஆண்டு ஆசிரிய நியமனம் பெற்றீர்கள். தங்களின் அறிவுத் திறமையால் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவாகி கோட்டக்கல்வி அதிகாரியாக, வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வுகளைப் பெற்று கல்வியுலகிற்கு சிறந்த சேவையாற்றினீர்கள். தங்களின் சேவைத் திறமையால் கல்வி நிர்வாக சேவை தரம் ஐற்கு பதவி உயரத்;தப்பட்டதுடன், 2012ம் ஆண்டு வடமாகாணத்திற்கே கல்விப்பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டீர்கள். அவ்வகையில் வடமாகாணத்தில் தங்களுடைய சிறந்த சேவையினால் கல்விப்புலம் சார்ந்த அனைவருக்கும் தங்களை நன்கு அறிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் கல்விச்சேவை வடமாகாண மக்களின் உயர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக அமைய மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
தீவகக் கல்வி வலயத்தின் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளரும் தற்போதைய வடமாகாண மேலதிக கல்விப்பணிப்பாளருமாகிய உயர்திரு. ஆறுமுகம் இராஜேந்திரம் அவர்களே இவ்விழாவிற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். பேராதனைப் பல்கலைகழகத்தில் கலைமானிப் பட்டத்தையும், யாழ் பல்கலைக் கழகத்தில் கல்விமுதுமானிப் பட்டத்தையும் பெற்ற தாங்கள் 1977ம் ஆண்டு இலங்கை ஆசிரிய சேவையில் இணைந்து ஆசிரியராக 10 ஆண்டுகள் சேவையாற்றி பின் அதிபராகவும் கடமையாற்றி 1990ம் ஆண்டுகளிலிருந்து உதவிக்கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், வடமராட்சி, யாழ்ப்பாணக் கல்விவலயங்களில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் தீவக, வலிகாமம் கல்விவலயங்களில் வலயக்கல்விப்பணிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளராகவும் சேவை புரிவதில் மகிழ்ச்சியடைகின்றோம். எமது கல்வி வலயத்தில் தாங்கள் பணியாற்றிய காலம் எமது பொற்காலமாகக் கருதுகின்றோம். தங்களின் சுறுசுறுப்பும், கடமையுணர்வும் எம்எல்லோரதும் பணிக்கும் நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் இக் கல்விச்சேவை மென்மேலும் தொடர மனமார வாழ்த்துகின்றோம்.
தீவகக் கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு. தி .ஜோன் குயின்ரஸ் அவர்களே, நீங்கள் இ.வ்விழாவிற்கு கௌரவ விருந்தினராக வருகை தந்துவிழாவைச் விழாவைச் சிறப்பித்திருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரியான தாங்கள் கல்வியியல், பண்பாட்டியல் தமிழ் போன்ற துறைகளில் முதுகலைமானிப் பட்டங்களைப் பெற்று சிறந்த கல்விமானாக தங்களை உயர்த்திக் கொண்டீர்கள். தங்களின் திறமையினால் ஆசிரியராக, விரிவுரையாளராக கடமையாற்றினீர்கள். கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்த்தப்பட்ட தாங்கள் பின் தீவக கல்வி வலயத்தில் மாணவர் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவிற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினீர்கள். தங்களின் சேவைத்திறமையால் தீவக கல்வி வலயத்தின் வலயகல்விப்பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு தீவகச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையை வழங்கி வரும் தங்களை இன்றைய பரிசில் தின விழாவில் கௌரவிப்பதில் பெருமகிழ்வடைகிறோம். தங்களின் இக் கல்விபணி எமது தீவக வலயத்தின் உயர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
அன்புக்கும் பெரு மதிப்பிற்கும் உரிய எமது பழைய மாணவன் வைத்திய கலாநிதி வி.விஐயரத்தினம் அவர்களே, நீங்கள் இவ்விழாவிற்கு கௌரவவிருந்தினராக கலந்து சிறப்பிப்பதில் பெரு மகிழ்வடைகின்றோம். இக்கல்லுரியிலேயே ஒடி விளையாடி பல்கலையும் கற்றுத் தேர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வைத்திய கலாநிதிப் பட்டத்தைப் பெற்று எம்மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையைப் புரிந்து, பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்து குழந்தைகள் வைத்தியத்துறையில் நிபுணத்துவம் பெற்ற தாங்கள் கனடாவிலும் நீண்ட பெரும் சேவையை வழங்கினீர்கள். இக்காலத்தில் தங்களின் பிறந்த பொன்னாட்டை மறவாது தேவைப்படும் போதெல்லாம் வேண்டுவோர்க்கு வேண்டியனவற்றை ஈர்ந்து காரை மண்ணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தன் மகனை இக் கல்லூரி அன்னை தனது 125 அவது அகவையிலே கௌரவிப்பதில் பெரு மகிழ்வடைகின்றாள்.
பாடசாலை விபரம்
1AB தரத்தை சேர்ந்த தரம் 1-13 வரையான வகுப்புகளைக் கொண்ட எமது பாடசாலை 01.01.2012 முதல் 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமையினால்,ஆரம்பப் பிரிவு பாடசாலை தனியாக பிரிக்கபட்டு சுப்பிரமணிய வித்தியாசாலை என இயங்க எமது பாடசாலை 6-13 வரை வகுப்புக்களை கொண்ட 1யுடீ பாடசாலையாக செயற்படுகின்றது.
மாணவர் விபரம்
6-13 வகுப்பு வரை கனிஸ்ட இடைநிலைபிரிவில் 343 மாணவர்களும், சிரேஸ்ட இடைநிலைப் பிரிவில் 219 மாணவர்களுமாக மொத்தம் 562 மாணவர்கள் கற்றனர். 2011ம் ஆண்டு 826 மாணவர்களைக் கொண்டிருந்த எமது பாடசாலை ஆரம்ப பிரிவு தனியாக்கப்பட்டமையினால் மாணவர் எண்ணிக்கை 562ஆகக் குறைவடைந்தது.
ஆசிரியர் விபரம்
2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் 56 ஆசிரியர்கள் இக்கல்லூரியில் மிகச் சிறப்பாகக் கடமையாற்றினார்கள். இவர்களில், 01 முதுதத்துவமானி ஆசிரியரும், 04 முதுகலைமானிஆசிரியர்களும், 31 பட்டதாரி ஆசிரியர்களும், 18 விசேட பயிற்சி ஆசிரியர்களும், 02 கஇபொஇத உயர்தரம் பூர்த்தி செய்த ஆசிரியர்களும் உள்ளனர்
இவர்களில் 2012 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் 16 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர் அவர்களின் விபரம்,
1. திரு.ந.சிவகுமார் – கணிதம்
2. திரு.வே.உருத்திரசிங்கம் – கணக்கியல்
3. திரு.செ.அருள்செல்வம் – இணைந்த கணிதம்
4. திரு.அ.மனோகரன்; – தமிழ்
5. திரு.S.கருனானந்தன் – கணிதம்
6. செல்வி.ளு.சியாமளா – நாடகமும் அரங்கியலும்
7. திரு.S.தவராஜா – ஆங்கிலம்
8. திரு.கௌ.மதனகோபன் – தமிழ்
9. திரு.பா.பாலசுப்பிரமணியம் – தமிழ்
10. திரு.T.சிறிதரன் – ஆங்கிலம்
11. திருமதி.பு.கம்சன் – வர்த்தகம்
12. திருமதிச.சிறிதரன் – சங்கீதம்
13. திருமதி.K.கமலவேணி – உடற்கல்வி
14. செல்வி.N.சிவரூபி – சமயம்
15. திருமதி மோ.சிவகுமார் – பொருளியல்
16. திருமதி. பு.கம்சன்
இவர்கள் இப் பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்புடன் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். இவர்கள் ஆற்றிய சேவைக்கு கல்லூரி சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, சென்ற இடங்களில் சிறப்பாக பணியாற்றி பல்புகழ்களையும் பெற வாழ்த்துகின்றேன்.
மேலும் 2012 ஆம் ஆண்டில் எமது பாடசாலைக்கு 17 ஆசிரியர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். இவர்களில்
1. திருமதி.உ.சுரேந்திரன் விஞ்ஞானம்
2. திருமதி ச. உலககுருநாதன் தமிழ்
3. திருமதி ப. சசிதரன் தகவல் தொழினுட்பம்
4. திருமதி. சி. வாகீசன் விஞ்ஞானம்
5. திருமதி க. றொபேசன் சங்கீதம்
6. திருமதி வி. றமணன் நாடகமும் அரங்கியலும்
7. திருமதி தா.ஜெகன்நாதன் பொருளியல்
8. திருமதி ச. தியோஜினஸ் கிறிஸ்தவம்
9. திருமதி ச.பிரதீபன் இந்துநாகரிகம்
10. செல்வி சி. சின்னையா ஆங்கிலம்
11. திருமதி க.கமலதாசன் உடற்கல்வி
12. செல்வி ந.சிவரூபி சைவசமயம்;
13. திருமதி பே.சந்திரதாசன் நடனம்
14. திருமதி சி. லக்ஸ்மன் தகவல் தொழினுட்பம்
15. திருமதி க. சிவநேசன் வர்த்தகம்
16. திருமதி ய. விஜயகுமார் நடனம்
17. திரு. தெ. பிரபாகரன் இணைந்த கணிதம்
புதிதாக எமது கல்லூரிக் குடும்பத்தில் இணைந்து கொண்ட இவ்வாசிரியர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
கல்விசாரா ஊழியர்கள்
திரு.த.பரமசாமி ஆய்வுகூட உதவியாளராகவும், திரு. ஆ. தியாகலிங்கம் பாடசாலை இரவு நேரக்காவலாளியாகவும், திரு. மு. சிவனேஸ்வரன் சுகாதாரத் தொழிலாளியாகவும் கடமை புரிகின்றனர். எமது பாடசாலைக்கு அலுவலகப் பணியாளர் இல்லாத நிலைமையிலும் திரு.த.பரமசாமி,திரு. மு. சிவனேஸ்வரன் ஆகியோர் தமது கடமைகளுடன் அலுவலகப் பணியாளர் கடமைகளையும் இணைத்து நிறைவு செய்கின்றனர். அவ்வகையில் இவர்களின் கடமையுணர்வையும் அர்ப்பணம் மிக்க சேவையையும் இச்சமயத்தில் பாராட்டுகின்றேன்.
இவர்களுடன் எமது பாடசாலையின் பழைய மாணவியான செல்வி சி. அமுதா அலுவலக முகாமைத்துவ உதவியாளருக்கான கடைமைகளைச் சிறப்பாக தொண்டர் அடிப்படையில் ஆற்றி வருகின்றார். இவருடைய தன்னலமற்ற சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
பாடவிதான செயற்பாடுகள்
2012இல் கல்வித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டடன. இதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 58.5மூ மாணவர்கள் க.பொ.த உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். இதில் சங்கீதம்இ நடனம்இ நாடகமும் அரங்கியலும்; ஆகிய பாடங்களில் 100மூ சித்தியையும்இபுவியியல் சைவசமயம் ஆகிய பாடங்களில் 80மூ தத்திற்கு மேற்பட்ட சித்தியையும்; பெற்றுள்ளார்கள். 2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 54மூ மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். இதில் வணிகம்இ கணக்கீடுஇ வரலாறுஇ சங்கீதம்இ நாடகமும் அரங்கியலும்இ சித்திரம்இ இந்துநாகரீகம் ஆகிய பாடங்களில் 100மூ சித்திகளை பெற்றுள்ளனர். இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
பொதுப்பரீட்சைப் பெறுபேறு
தீவக வலயத்திலேயே 7 A,B,C எனும் சிறப்பு பெறுபேற்றை க.பொ.த சாதாரண தரத்தில் கனகலிங்கம் சாந்தினி எனும் மாணவி பெற்றுக் கொண்டார். க.பொ.த.உயர்தரத்தில்; நடராசா ராகினி கலைப்;பிரிவில் 3A பெறுபேற்றையும், வர்த்தகப்பிரிவில் சுந்தரலிங்கம் ஜனகன் 2AB பெறுபேற்றையும் சிறப்பாகப் பெற்றுள்ளனர். இவர்களையும் இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றேன.;
இணைப் பாடவிதானச் செயற்பாடுகள்
விளையாட்டுத்துறை
எமது கல்லூரியின் இணைப்பாடச் செயற்பாடுகளில் விளையாட்டுத் துறைகாத்திரமான சாதனைகளைப் புரிந்து வருகின்றது. .உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்து, வலைப்பந்து, கபடி போன்ற பெருவிளையாட்டுக்களிலும் மெய்வல்லுநர் நிகழ்வுகளிலும் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண, தேசிய நிலைகளை தனதாக்கிக் கொள்ளுமளவிற்கு உன்னத வளர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் ஆண், பெண் சதுரங்க அணிகள் வலயமட்டத்தில் வருடா வருடம் சிறந்த நிலைகளைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு 13 வயது ஆண், பெண் இரு கரப்பந்தாட்ட அணிகளும் வலயமட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்திற்கு தெரிவானது. ஆண், பெண் சதுரங்க அணிகளும் வலயமட்டத்தில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்டமட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். மெய்வல்லுனர் போட்டிகளிலும் வலயமட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி இருந்தனர். 800அ நிகழ்ச்சியில் சி.கோகுலன் மாவட்ட மட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். மேற்படி அணிகளை வழிநடத்தும் விளையாட்டுத்துறைச் செயலர் திருமதி.சா.சிவராஜ் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மன்றங்கள்
மாணவர்களின் பல்வேறு திறன்களையும், ஆளுமையையும் விருத்தி செய்வதற்கு மன்றங்கள் உறுதுணையாய் உள்ளன. மன்றச் செயற்பாடுகள் மூலம் பெருந்தொகையான மாணவர்கள்; நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடியவாறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறன்கள், ஆற்றல்கள் வெளிக் கொணரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பின்வரும் மன்றங்கள் கல்லூhயில் செயற்பட்டு வந்துள்ளன.
இந்துமாமன்றம்
திரு.அ.மனோகரன் பொறுப்பாசிரியர் தலைமையில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மற்றும் குருபூசை தினங்கள், நவராத்திரி விழா ஆகியவற்;;றை சிறப்பாகக் கொண்டாடியது.
உயர்தர மாணவர் மன்றம்
திரு.வே.சிவநேசன் பொறுப்பாசிரியர் தலைமையில் சிறப்பாக செயற்பட்டதுடன், இம் மன்றம் உயர்தர மாணவர் ஒன்று கூடல் மற்றும் மதியபோசன நிகழ்வையும் ‘நதி’ சஞ்சிகையும் வெளியிட்டனர்.
சுகாதார மன்றம்
திருமதி.சா.சிவராஜ் பொறுப்பாசிரியர் தலைமையில் சிறப்பாக செயற்பட்டதுடன் சிரமதானம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையிலும் ஈடு;பட்டுள்ளனர்.
விஞ்ஞான மன்றம்
திரு.ச.அரவிந்தன் பொறுப்பாசிரியர் தலைமையில் சிறப்பாக செயற்பட்டதுடன் விஞ்ஞான விநாடி வினாப்போட்டிக்கான பயிற்சிகள் மற்றும் புத்தாக்க போட்டிகளில் மாணவர்களை பங்குபற்றச் செய்து தேசிய ரீதியில் மாணவர் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. வலயமட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களான அ.பிரணவரூபன், ப. குலமதி, வி. விசாலினி ஆகியோர் மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றினர்.
சி.விசாலினி, வி.பத்மினி, பு.கம்சத்வனி, வி.கிசானி ஆகிய மாணவிகளால் புத்தாக்க போட்டியில் பனங்கழி பிளி இயந்திரம் தயாரிக்கப்பட்டு மாகாணமட்டத்தில் வெற்றி பெற்று தேசியமட்டப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர் இம்மாணவர்களையும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றேன்.
பாடப்புறச் செயற்பாடுகள்
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நீடிப்பதற்காக யாழ்ப்பாண பொதுநூலக கட்டமைப்பு மற்றும் யாழ் பல்கலைகழக மருத்துவபீட கண்காட்சி ஆகியனவற்றை பார்வையிடுவதற்காக மாணவர்கள் ஆசிரியர்களினால் அழைத்து செல்லப்பட்டனர்.
புலமைப்பரிசில்
எமது பாடசாலையைச் சேர்ந்த 16 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் நிதியையும், சிப்தொற புலமைப் பரிசில் நிதியை 8 மாணவர்களும், அவுஸ்திரேலியா காரை கலாசார மன்றத்தினரால் வழங்கப்படும் புலமைப் பரிசில் நிதியை 23 மாணவர்களுமாக மொத்தம் 47 மாணவர்கள் புலமைப் பரிசில் நிதியத்தினால் பயன்பெறுகின்றனர்.
நினைவுப்பரிசில்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதபாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்காக திரு. சின்னத்தம்பி தம்பிராஐh அவர்கள், தனக்குக் கணிதம் கற்பித்த ஆசிரியர்களான அமரர் மு.அம்பலவாணர், அமரர் க.வே.நடராசா ஆகியோரின் ஞாபகார்த்தமாக 3 மாணவர்களுக்கு சிறப்புப்பரிசிலை வழங்கியுள்ளார்.
க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் சங்கீத பாடத்தில் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்காக திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குடும்பத்தினர்; காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த அமரர் திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி (சச்சிதானந்தம் அவர்களின் தாயார்) அவர்களின் ஞாபகார்த்தமாக இரு மாணவர்களுக்கு நினைவுப் பரிசிலை வழங்கியுள்ளனர்.
பாடசாலை பௌதிக வளவிருத்தி
1000 பாடசாலை திட்டத்தின் கீழ் எமது பாடசாலைக்கு ஓதுக்கப்பட்ட மகிந்தோதய ஆய்வுகூட கட்டுமானப் பணிக்கான அடிக்கல் யாழ் மாவட்;ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு சில்வெஸ்திரி அலன்ரின் அவர்களால் நடப்பட்டது.
பழைய மாணவர் சங்கம்
எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தமது பங்களிப்பை ஆற்றி வருகின்றது. அவ்வகையில் கடந்த வருடம் 586,000.00 ரூபாவை பாடாசாலைக்கு வழங்கியது. இந்நிதியிலிருந்து பாடசாலைக்கான மின்கட்டணம், இணைப்பாட விதான செயற்பாடுகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவு, பயிற்சிச் செலவு, விளையாட்டுமைதான புனரமைப்புச் செலவு, வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி ஆகிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
நன்றியுரை
எமது அழைப்பை ஏற்று இந்நாளில் வருகை தந்து விழாவைச் சிறப்பித்த பிரதம விருந்தினர் வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு வ .செல்வராஜா அவர்கட்கும், சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த வடமாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு ஆ. இராஜேந்திரம் அவட்கட்கும், கௌரவ விருந்தினர்களாக வருகை தந்து விழாவைச் சிறப்பித்த தீவகக் கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் உயர்திரு .தி. ஜோன்குயின்ரஸ் அவர்கட்கும,; வைத்திய கலாநிதி வி. விஐயரட்ணம் அவர்கட்கும் எமது மனமார்ந்த நன்றிகள். மற்றும் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்து சிறப்பித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரியஆலோசகர்கள், அயற்பாடசாலைகளின் அதிபர்கள்;, ஆசிரியர்கள் எமது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மற்றும் இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கனடா பழையமாணவர் சங்கத்திற்கும், நினைவுப்பரிசில்களை வழங்கிய திரு. சி.தம்பிராஜா (ஓய்வு பெற்ற பிரதி அதிபர்), திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி ஞாபகார்த்தமாக வழங்கிய நினைவுப் பரிசில்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
நன்றி
அதிபர்
திருமதி வாசுகி தவபாலன்
No Responses to “2012ம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை”