காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் அதன் கனடாக் கிளையிடம் உதவி கோரி அனுப்பப்பட்டிருந்த கடிதங்கள் தொடர்பில் அண்மையில் கூடிய கனடாக் கிளையின் நிர்வாக சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு மூன்று இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபாவினை உதவுவதெனத் தீர்மானித்து குறித்த உதவித் தொகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மின்சாரப் பாவனையின் மேலதிகக் கட்டணம், இலத்திரனியல் நூலக மின்கட்டணம், Wi-Fi இணையக் கட்டணம், குடிநீர்க் கட்டணம், உபசரணை, அலுவலக உதவியாளர் வேதனம,; மதிய உணவு சமையல் கூலி உள்ளிட்ட நடைமுறைச் செலவீனங்களுக்கும் ஆசிரியர் தின விழா, மேலதிக வகுப்புக்களில் கலந்துகொண்டு வருகின்ற க.பொ.த.(சாதாரணம்) தர வகுப்பு மாணவர்களுக்கு உணவு வழங்கல், க.பொ.த.(உயர்தரம்) தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்பில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, வசதி குறைந்த மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாட்டுக்கான உதவி ஆகியவற்றுக்கே இவ்வுதவித் தொகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பரிசில் தினத்தின்போது நினைவுப் பரிசில்கள் வழங்கியமை க.பொ.த.(சாதாரணம்), க.பொ.த.(உயர்தரம்) ஆகிய பரீட்சைகளில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசில் வழங்கியமை, கல்வியியற் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசில் வழங்கியமை ஆகியனவற்றிற்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து தொண்ணூற்றேழாயிரம் ரூபா ஏற்கனவே உதவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “காரை.இந்துவின் நடைமுறைச் செலவீனங்கள், கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் ஆகியனவற்றிற்கு மூன்று இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது”