அண்மையில் எமது சகோதர பாடசலையான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
வடமாகாண கல்வி, சுகாதார அமைச்சுக்களுடன் தீவக வலயக் கல்வி அலுவலகம் இணைந்து நடத்திய பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வு சென்ற வெள்ளிக்கிழமை(25.10.2013) அன்று யாழ்ற்றன் கல்லூரியில் தீவக வலயக் கல்விப்ணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.இராஜேந்திரமும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு அவர்களும் ஊர்காவற்றுறை பொது சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி.ஜான்சி ஆனந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் சுகாதார மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு அறிமுகம், மருத்துவமுகாம் மற்றும் காரைநகர் கோட்ட மட்ட மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்று சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விலேயே எமது அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காணலாம்.
No Responses to “யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை சுகாதார மேம்பாட்டு செயலமர்வு”