எமது கல்லூரியின் ஆங்கில தின விழா 13.11.2018 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வு நிலை ஆங்கில பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு K. கதிரேசபிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக ஆங்கில பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு N. பத்மராஜா அவர்களும் ஆங்கில பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு S. கிரிதரன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தனர்.
விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள். மங்கள விளக்கேற்றலுடன் எமது நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் அதிபர் உரையும் இடம்பெற்றது. பின்னர் “Blossom” மலர் வெளியீடு இடம்பெற்றது. இம்மலரினை பிரதம விருந்தினர் அவர்கள் நூலை வெளியிட்டு வைக்க முதற் பிரதியை கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன. பின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதலாவதாக வரவேற்பு நடனம், ஆங்கில மொழி மூல உரையாடல், ஆங்கிலக் கவிதை, ஆங்கில மொழி மூல கதைகூறல், ஆங்கிலக் குழுப்பாடல் மற்றும் ஆங்கிலப்பாடலுக்கான நடனம் என்பன இடம்பெற்றன. பின்னர் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் உரை என்பன இடம்பெற்றது. இறுதியாக ஆங்கில தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. நன்றியுரை மற்றும் பாடசாலை கீதத்துடன் எமது நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
No Responses to “ஆங்கில தின விழாவும் ஆங்கில சஞ்சிகை “Blossom” வெளியீட்டு நிகழ்வும் – 2018”