கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவரும் யாழ் மாவட்டத்தில் சிறந்த சிற்பக் கலைஞராக விளங்குபவருமாகிய திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் பாடசாலையில் நடைபெற்ற வாணி விழாவின்போது பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலையின் உயர்தர வகுப்பில் பயிலும் கலைத்துறை மாணவர்கள் தமது கற்றற் செயற்பாட்டின் ஒரு அங்கமான விடயஆய்வினூடாக பிரதேசத்தில் வாழும் கலைஞர்களை இனம் கண்டனர். அவர்களுள் மிகச் சிறந்த கலைஞராக சிற்பக் கலைஞர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலையில் கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி நடைபெற்ற வாணிவிழாவின் போது அவரின் கலைத்திறனைப் பாராட்டி பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். பாடசாலையின் ஓவிய ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் கலைஞருக்கு பொன்னாடையினை அணிவித்துக் கௌரவித்தார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் சிற்பக் கலையகம் ஒன்றை நடத்திவரும் கலைஞர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் பாடசாலைக்கு ஒரு சோடி தீபநாயகி சிலைகளை தமது அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
ஒரு கலைஞன் தனது படைப்பினை எத்தனையோ சிரமங்களின் மத்தியிலேயே உருவாக்குகின்றான். அந்தப் படைப்பை ரசிகர்கள் வரவேற்கும் போது அந்தக் கலைஞனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அந்த வகையில் கலைக் கோயிலான எமது பாடசாலையில் கலைத் தாயான வாணிக்கு விழா எடுக்கும் சந்தர்ப்பத்தில் எமது கல்லூரித் தாயின் புதல்வனும் எமது பிரதேசத்தில் கலைப்பணி செய்யும் சிறந்த சிற்பக் கலைஞருமாகிய திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் எமது கல்லூரியினால் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு மதிப்பளித்து கௌரவித்த எமது கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் உயர்தர கலைத்துறை மாணவர்களும் ஆசிரியரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் அன்பளிப்புச் செய்யப்பட்ட தீபநாயகி சிலையின் படத்தையும் இங்கே காணலாம்.
No Responses to “சிறந்த சிற்பக் கலைஞர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் கௌரவம்”