காரைநகர் கோட்டத்தில் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான இலங்கைப் பரீட்சைத் திணைக்கள சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காரைநகர் கோட்டக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய நடராசா மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை 18.11.2013 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் தலைமை தாங்கினார். தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய அதிபர் திரு.சு.கணேசமூர்த்தி, வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை அதிபர் செல்வி.விமலாதேவி விசுவநாதன், சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் திருமதி.கௌ.அருள்மொழி, மெய்கண்டான் வித்தியாலய அதிபர் திருமதி.புஸ்பராணி சந்திரராசா மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
காரைநகர் கோட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 179 மாணவர்களில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்திபெற்ற 98 மாணவர்களே இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து இச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
அண்மையில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பாடசாலை சமூகமும் தமது ஊட்டப் பாடசாலைகளில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி வாழத்துச் செய்தியொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காணலாம்.
No Responses to “தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில் நடைபெற்றது”