சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையம் ஊடாக பரீட்சைத் திகை;களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவர்கள் உயிரியல் முறைமை தொழில் நுட்பம், பொறியியல் தொழில் நுட்பம், கலை, ஆகிய மூன்று துறைகளில் கோட்ட மட்டத்தில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
உயிரியல் முறைமை தொழில் நுட்பத் துறையில் A, 2B சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற செல்வன் எஸ்.கிருஸ்ணா என்ற மாணவன் யாழ்.மாவட்டத்தில் 10வது நிலையினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களையும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துவதாகத் தெரிவித்த கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் இவர்களின் சாதனைகளுக்கு காரணமாகவிருந்து செயற்பட்ட அனைவரையும் சிறப்பாக கற்பித்த ஆசிரியர்களைப் பாராட்டி நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகளின் விபரங்களை கீழே பார்வையிடலாம்:
2018 G.C.E(A/L) Results
No. | Name | Subject Stream | Results | District Rank | Entrance Stream |
1. | S.Krishna | Bio. Tech. | A 2B | 10 | Bio. Tech. |
2. | S.Sajeepan | Bio. Tech. | 2B C | 19 | Bio. Tech. |
3. | K.Abinosa | Bio. Tech. | 3C | 78 | Bio. Tech. |
4. | S.Thuyavan | Eng. Tech. | B 2C | 45 | Eng. Tech. |
5. | K.Kajanthan | Eng. Tech. | B 2C | 48 | Eng. Tech. |
6. | T.Januja | Arts | A B C | Arts | |
7. | K.Piriya | Arts | 2B C | Arts | |
8. | K.Thamiliny | Arts | A C S | Arts | |
9. | K. Abiramy | Arts | A 2C | Arts | |
10. | S.Sinthuja | Arts | B C S | Arts | |
11. | R. Luxica | Commerce | 3 C | Commerce | |
12. | K. Vasantharuban | Bio | C 2 S | Bio |
No Responses to “க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை.இந்து மீண்டும் சாதனை!”