எமது கல்லூரியின் பழைய மாணவியும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் துணைவியாரும் முன்னாள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளமை அறிந்து காரை இந்து அன்னை பெருமையடைகிறாள.
எமது பாடசாலையின் வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர். எமது பாடசாலையின் மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கினை தனது அமைச்சின் நிதி உதவியுடன் அமைத்து வழங்கியமை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கது. அமைச்சர் அவர்களை கல்லூரிச் சமூகம் சார்பாக மனதார பாராட்டி வாழ்த்துவதோடு அவரது அரசியல் பணி மென்மேலும் சிறக்க ஈழத்துச்சிதம்பரத்தில் வீற்றிருக்கும் இறைவனை வேண்டுகின்றோம்.
நன்றி.
திருமதி சிவந்தினி வாகீசன்
அதிபர்
No Responses to “எமது கல்லூரியின் பெருமை மிக்க பழைய மாணவி திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளமையை பாடசாலை சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.”