தேசிய மட்டத்திலான சமூக விஞ்ஞானப் போட்டியில் காரை.இந்துவிலிருந்து கலந்துகொண்ட மூன்று மாணவர்களுள் செல்வன் யாதவன் இராமகிருஸ்ணன் 1ம் இடத்தையும் செல்வன் நவநீதன் இராமகிருஸ்ணன் 8ம் இடத்தையும் பெற்று காரை.இந்துவை பெருமைப்படுத்தியிருந்தனர்.
இவர்களையும் வெவேறு போட்டிகளில் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டவர்களையும் பாராட்டிக் கௌரவித்த நிகழ்வு சென்ற 22-03-2024ஆம் திகதி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையினை பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவிச் செயலாளரும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் அக்கறைகொண்டு பல்வேறு உதவிகளை வழங்கி வருபவருமாகிய திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்த இந்நிகழ்வில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஞானசுந்தரன், முன்னாள் அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, முன்னாள் அதிபர் திரு.பொன் சிவானந்தராசா, முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.கே.சதாசிவம், தீவக வலய சமூக விஞ்ஞான பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.பா.பாஸ்கரன், கல்லூரியின் பழைய மாணவனும், முன்னாள் ஆசிரியரும், பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவருமாகிய திரு.செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்), பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைச் செயலாளர் திரு.கனக சிவகுமாரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
சாதனையாளர்கள் அனைவரும் ரொக்கப் பரிசில் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் பாராட்டு விருதுகள் வழங்கப்பெற்று கௌரவிக்கபட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் முன்னாள் அதிபர்களின் புகைப்படங்கள் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வரும் வரிசையில் முன்னாள் அதிபர் அமரர் தர்மசீலன் அவர்களின் திருவுருவப்படம் எஸ்.கே.சதாசிவம் அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் அவரின் சேவையினை நினைவுகூர்ந்து திரு.சதாசிவம் அவர்கள் உரைநிகழ்த்தியிருந்தார்.
பாராட்டிக் கௌரவிக்கப்பட்ட தேசியமட்ட சாதனையாளர்களின் விபரம்:
தேசிய மட்ட சமூகவிஞ்ஞானப் போட்டி
1. செல்வன் இ.யாதவன் – தரம் 9 – தேசிய மட்டம் 1ம் இடம்
2. செல்வன் இ.நவநீதன் – தரம் 11 – தேசிய மட்டம் 8ம் இடம்
3. செல்வி ர.யதுஸா – தரம் 9 – தேசிய மட்டம் பங்குபற்றியமை
விளையாட்டு (அரைமரதன் போட்டி)
1. செல்வன் தி.கஐPபன் – மாகாணமட்டம் 2ம் இடம் – தேசிய மட்டத்தில் பங்குபற்றியமை
கட்டுரைப் போட்டி
1. செல்வன் க.நிரோஐன் – தேசிய மட்டத்தில் பங்குபற்றியமை
2. செல்வன் க.கோபாலகிருஸ்ணன் – தேசிய மட்டத்தில் பங்குபற்றியமை
3. செல்வி கு.வைஷ்ணவி – தேசிய மட்டம் 4ம் இடம்
பேச்சுப் போட்டி (விஞ்ஞானம்)
1. செல்வி சா.தவலோசனா – தேசிய மட்டத்தில் பங்குபற்றியமை
புத்தாக்கப் போட்டி
1. செல்வன் யோ.ஹர்சன் – தேசிய மட்டத்தில் பங்குபற்றியமை
பாராட்டிக் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் விபரம்
தேசிய மட்ட சமூகவிஞ்ஞானப் போட்டிக்கு மாணவர்களை பயிற்சியளித்தமை
i. திரு ச.சுகந்தன்
ii. திருமதி ர.மனோறஞ்சிதமலர்
iii. திருமதி த.சிவாஞ்சலி
iஎ. செல்வி வி.கிரிஜா
விளையாட்டு அரைமரதன் போட்டிக்கு பயிற்றுவித்தமை –
திரு ம.ஜெனிஸ்ரன் இதயகுமார்
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி (தமிழ்,விஞ்ஞானம்) பயிற்றுவித்தமை
1. திரு இ.பிரதாபன்
2. திருமதி லி.மனஸ்வினி
புத்தாக்கப் போட்டிக்கு பயிற்றுவித்தமை – திரு மு.ஜெயானந்தன்
நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்களின் அனுசரணையில் தேசிய மட்ட சாதனையாளர்களும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.”