பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களும், பழைய மாணவர்களும் தாமாகவே முன்வந்து வசதி குறைந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் செயற்பாடு தொடர்பிலான உதவிகளை வழங்கி வருகின்றனர். இவ்வுதவிகளை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஒருங்கிணைத்து மாணவர்களின் இனம்காணப்பட்ட முக்கியமான தேவைகளுக்கு தாய்ச் சங்கத்தினூடாக உதவி வருகிறது. அந்த வரிசையில் வாழ்வாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 77 மாணவர்களுக்கு (ஆண்கள் 32, பெண்கள் 35) பாதணிகள் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இப்பாதணிகளை வழங்குவதற்கான நிதியினை சுவிற்சலாந்து Siva Travels உரிமையாளர் திரு.சிவா.கனகசுந்தரம் அவர்களும், கோவளத்தைச் சேர்ந்தவரும் காரை.இந்துவின் பழைய மாணவனுமாகிய அமரர் அம்பலவாணர் கந்தையா அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது குடும்பத்தைச் சேர்ந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளை உறுப்பினர் ஒருவரும் முன்வந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். உதவியை வழங்கிய இவர்கள் இருவருக்கும் இவ்வுதவியைப் பெற்றுத்தந்த பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
சென்ற 22-03-2024 அன்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்த தேசியமட்ட சாதனையாளர்களை பாராட்டிக் கௌரவித்த நிகழ்வின்போது சம்பிரதாயபூர்வமாக சில மாணவர்களுக்கு இப்பாதணிகள் வழங்கப்பட்டது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளர் திரு.கனக சிவகுமாரன் அவர்களும் பிரான்ஸ்-காரை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கல்லூரியின் பழைய மாணவனும் முன்னாள் ஆசிரியருமாகிய திரு.செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்)அவர்களும் இப்பாதணிகளை மாணவர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கிவைத்தனர்.
பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “சுவிற்சலாந்து Siva Travels சிவா கனகசுந்தரம், கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர் ஒருவர் ஆகியோரின் உதவியில் காரை.இந்துவின் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.”