2024.04.05 வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் காலைப்பிரார்த்தனையுடன் விசேட நற்சிந்தை இந்து மாணவர் மன்றத்தால் நடத்தப்பட்டது.
அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காரை.இந்துவின் முன்னாள் ஆசிரியரும் ஈழத்தின் தலைசிறந்த சமய, இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவாளருமான தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில் கல்வியுடன் விளையாட்டு ஒன்றிணைந்து இருக்க வேண்டியதன் முக்கியதுவம் பற்றியும் விளையாட்டு பல சந்தர்ப்பங்களில் உயிர்காக்கும் கருவியாக அமைந்துள்ளதாகவும் விளக்கியிருந்தார். விளையாட்டு ஒரு மனிதனை சமநிலை ஆளுமை உடையவராக செதுக்குகின்றது எனவும் குறிப்பிட்டு மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை தனது அனுபவங்களுடன் இணைத்து குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மாணவர்கள் எவ்வாறு கற்க வேண்டும் தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடுபவருக்கு கற்றல் ஒரு சுமையாக அமையாது என சுவை பட எடுத்துக் கூறியிருந்ததுடன் குரு பக்தி பற்றிக் குறிப்பிட்டு விசுவாசம் மாணவர்களை உயர்த்தும் எனவும் கூறியிருந்தார்.
மாகாண மட்ட நடன நாட்டியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் வழங்கப்பட்ட சிறந்த செயற்பாட்டு மாணவர்களுக்கான சின்னங்களும் இவரால் சூட்டப்பட்டது.
நிகழ்வின்போது எடுக்கப்பட்டிருந்த சில புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது:
No Responses to “காரை.இந்துவின் மாணவர்கள் மத்தியில் தமிழருவி சிவகுமாரனின் விழிப்புணர்வுச் சொற்பொழிவு.”