கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.ஆறுமுகம் சோதிநாதன் அண்மையில் காரைநகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது எமது பாடசாலைக்கும் நேரில் சென்றிருந்தார்.
பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் ஆசிரியர் சகிதம் கல்லூரிக்குச் சென்றிருந்த திரு.ஆ.சோதிநாதன் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களை அலுவலக முறையில் சந்தித்து பாடசாலையின் தற்போதய நிலை தொடர்பாகக் கலந்துரையாடினார்.
கனடாக் கிளையினூடாக பாடசாலையில் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள், மற்றும் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கம் அமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
கல்லூரியின் நடராஜா ஞபாகார்த்த மண்டபம், வடக்கு, தெற்கு வளாகங்களில் உள்ள வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றையும் அதிபர் மற்றும் போசகர் திரு.எஸ்.கே. சதாசிவம் ஆகியோர் சகிதம் சுற்றிப்பார்வையிட்ட திரு.ஆ.சோதிநாதன், அவர்களின் விளக்கங்களையும் கேட்டறிந்து கொண்டாhர்.
கல்லூரி அதிபர் மற்றும் தாய்ச் சங்கத்தின் போசகர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களையும் தாம் பார்த்தறிந்து கொண்டவற்றையும் கனடாக் கிளையின் நிர்வாக சபையில் தெரிவிப்பதாகவும் கிளைச் சங்கம் கல்லூரி வளர்ச்சிக்குச்
சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி ஒத்துழைக்க தயாராகவுள்ளதாகவும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களிடம் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின்போது பாடசாலையின் நிகழ்வுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்துவதற்கும், கல்லூரியின் இணையத்தளம் மற்றும் கனடாக் கிளையின் இணையத்தளம் ஆகியவற்றில் செய்திப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவதற்கெனவும் சிறந்த தரத்திலான இலத்திரனியல் புகைப்படக் கருவி (OLYMPUS SZ16 Digital Camera) ஒன்றினையும் கனடாக் கிளையின் சார்பில் திரு.ஆ.சோதிநாதன் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களிடம் கையளித்திருந்தார்.
மேற்படி புகைப்படக் கருவிக்கான ஒருபகுதி அநுசரணையை கனடாக் கிளையின் நிர்வாகசபை உறுப்பினர் திரு.இராஜரட்ணம் சத்தியசீலன் வழங்கியதுடன் கருவியைக் கொள்வனவு செய்து உதவியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்லூரிக்கு திரு.ஆ.சோதிநாதன் பயணம் மேற்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்களையும் அதிபரிடம் புகைப்படக் கருவி கையளிப்பதiனையும் படங்களில் காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் கல்லூரிக்கு பயணம்”