டெங்கு காய்ச்சல் தொடர்பில் பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் வலய மட்டத்தில் முதல் ஜந்து இடங்களையும் பெற்று வெற்றிபெற்றதுடன் மாகாண மட்டத்தில் ஒரு மாணவன் மூன்றாவது இடத்தினைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
வலயமட்டத்தில் முதல் ஜந்து இடங்களிலும் வெற்றிபெற்ற மாணவர்கள்:
1.செல்வன் சுதாகரன் யஸ்ரின்ராஜ்
2.செல்வன் புஸ்பராசா சேந்தன்
3.செல்வி ஆரோகணன் சிந்துஜா
4.செல்வன் சசிகரன் தனுஜன்
5.செல்வன் விஜயகுமார் கஜரூபன்
மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றிபெற்ற மாணவன்:
செல்வன் விஜயகுமார் கஜரூபன்
வெற்றிபெற்ற மாணவர்களையும் இவர்களைப் பயிற்றுவித்த சித்திரபாடத்தின் ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அவர்களையும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பாராட்டி வாழ்த்துவதாக கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்துள்ளார். கல்லூரிச் சமூகத்துடன் இணைந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் சாதனை மாணவர்களையும் ஆசிரியரையும் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றது.
ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையினால் சென்ற ஆண்டு நடாத்தப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டமை இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றிபெற்ற மாணவர்கள், அதிபர் மற்றும் சித்திரபாட ஆசிரியர் ஆகியோருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “டெங்கு காய்ச்சல் தொடர்பில் வலய, மாகாண மட்டங்களிலான சித்திரப் போட்டியில் வெற்றிபெற்று காரை.இந்து மாணவர்கள் சாதனை!”