திருமதி.வாசுகி தவபாலன், அதிபர்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திய கல்லூரி அதிபரும் சங்கத் தலைவருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைவர் அறிக்கையினை வாசித்தளித்திருந்தார்.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
மிகவும் விபரமாக வெளியிடப்பட்ட அதிபர் அறிக்கை பழைய மாணவர் சங்கம், கல்வித்திணைக்களம், புலம்யெர் காரை அமைப்புகள், மற்றும் நன்கொடையாளர்களின் நிதியீட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் கல்லூரியின் பாடவிதான, இணைப்பாடவிதான சாதனைகள், எதிர்காலத்தில் கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பெளிதிவள, பாடவிதான, இணைப்பாடவிதான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
அதிபர் அறிக்கையின் முழுமையான பகுதியைப் பார்வையிட இங்கே அழுத்துக.
No Responses to “பழைய மாணவர் சங்கம் – காரைநகர், அதிபர் அறிக்கை (18.01.2013 – 21.12.2013)”