திரு.பா.இராமகிருஷ்ணன், பொருளாளர்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
அப்பொதுக் கூட்டத்தில் பொருளாளர் திரு.பா.இராமகிருஷ்ணன் ஆண்டு வரவு செலவு அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தார். அவ்வறிக்கையும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
மிகவும் விபரமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த பொருளாளர் அறிக்கை, கொள்ளல் கொடுத்தல் கணக்கு, தனித்தனியான செலவு விபரங்கள், பொருட்கள் அன்பளிப்பு என்பனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
01.01.2012 தொடக்கம் 12.01.2013 வரையிலான கொள்ளல் கொடுத்தல் கணக்கும் 13.01.2013 தொடக்கம் 30.09.2013 வரையான கொள்ளல் கொடுத்தல் கணக்கும் உரிய ஆவணங்கள், சிட்டைகள், கணக்குப் புத்தகங்களுடன் எண் பார்வை செய்யப்பட்டு கணக்காளர் திரு. S. வெற்றிவேலாயுதம் அவர்களினால் தயாரிக்கப்பட்டு இலச்சினை இடப்பட்டது.
கணக்காளர் திரு. S. வெற்றிவேலாயுதம் அவர்கள் தனது சேவையை இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான பொருளாளர் அறிக்கையை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்கம்-காரைநகர், பொருளாளர் அறிக்கை (2012-2013)”