அமரர்களான அன்பழகன், அருளழகன் ஆகியோரின் நினைவாக இசை, ஓவியம் ஆகிய பாட விருத்திக்காக திரு.பொன்னம்பலம் குடும்பத்தினரால் கனடாக் கிளையினூடக வழங்கப்பட்ட நிதியுதவித் திட்டம் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் 21.12.2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் அறிக்கையிலும், செயலாளர் அறிக்கையிலும் குறிப்பிடப்படாதமைக்கு சங்கத்தின் தலைவரும், அதிபருமாகிய திருமதி. வாசுகி தவபாலன் அவர்கள் தமது மனவருத்தத்தினைத் தெரிவித்திருக்கிறார்.
அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளாளர் அறிக்கையில் இந்நிதிக்கான வரவு சரியாகப் பதிவு செய்யப்ட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் மேற்படி குடும்பத்தினருக்கு கனடாக் கிளையினூடாக அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறித்த நிதியீட்டத்திற்கான செயற்பாடு இதுவரை செயற்படுத்த தொடங்காதமையினாலேயே அதன் செலவு விபரம் உட்படுத்தப்பட வில்லை எனவும், இருப்பினும் வழங்கப்பட்ட நிதியின் நோக்கத்தையம் எதிர்காலத்திலும் தங்களால் அந்நிதி தொடர்ச்சியாக வழங்கப்படவிருக்கும் விடயத்தையும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்திருக்கலாம் எனவும் அவ்வாறு குறிப்பிடத் தவறியமைக்குத் தமது மனவருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் எமது பாடசாலைக்கு மேற்படி குடும்ப உறுப்பினர்கள் வழங்கிவரும் ஆதரவிற்கு பாடசாலைச் சமூகம் என்றும் நன்றியுணர்வுடன் இருக்கும் எனவும் குறிப்பிட்டடுள்ளார்.
தொடர்பு பட்ட செய்தி
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு அமரர் பொன்னம்பலம் அன்பழகன் அமரர் பொன்னம்பலம் அருளழகன் ஆகியோரின் நினைவாக வருடாந்தம் 50,000 ரூபாவினை வழங்க குடும்பத்தினர் தீர்மானம்
No Responses to “அதிபர் மனவருத்தம் தெரிவிக்கிறார்”