கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும் உயர் கல்வியையும் பயின்று ஆசிரியராக கல்விச்சேவையினுள் நுழைந்த திரு.சுப்பிரமணியம் கணேசமூர்த்தி அவர்கள் தாம் சேவையாற்றிய பாடசாலைச்; சமூகங்களினதும் கல்வித்திணைக்கள அதிகாரிகளினதும் நன்மதிப்பினையும் பாராட்டினையும் பெற்றுக்கொண்டு நல்லாசிரியர் என்பதற்கு வரைவிலக்கணமாக விளங்குபவர்.
சுந்தரமூர்த்தி வித்தியாலய அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக பல வருடங்கள் பணியாற்றியிருந்தார். ஆங்கில பாடத்தில் சிறப்புப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழக பட்டதாரி என்பதுடன் கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் கொண்டிருப்பவர்.
கல்லூரியின் பழைய மாணவர் என்ற வகையிலும் முன்னாள் ஆசிரியர் என்ற வகையிலும் அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ள திரு.கணேசமூர்த்தி அவர்களின் கல்விப் பணியினைப் பாராட்டுவதுடன் மணிவிழா காணும் அவரையும் அவரது துணைவியாரையும் வாழ்த்துவதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை மகிழ்வடைகின்றது.
இன்று 30.03.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சுந்தரமூர்த்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற திரு.சு.கணேசமூர்த்தி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் நேரடியாகக் கலந்து கொண்டு எமது கல்லூரிச் சமூகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் படங்கள் சிலவற்றை கிழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை சுந்தரமூர்த்தி வித்தியாலய அதிபராக பதவி வகித்து இiளைப்பாறிய திரு.சு.கணேசமூர்த்தி அவர்களின் கல்விச் சேவையினைப் பாராட்டுகிறது”