கடந்த டிசம்பர் மாதம் 2013 இல் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைப் பெறுபேறுகள் கல்வித்திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச்சிறந்த 6A,B,C,S என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி.தீபிகா நவரத்தினம் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் முதல்நிலை மாணவி என்ற பெருமை கொண்டு விளங்குகிறார்.
மேற்படி பரீட்சையில் ஆங்கல மொழிமூலம் தோற்றி மிகச் சிறந்த 5A,2B,2C என்ற பெறுபேற்றினைப் பெற்ற மாணவன் செல்வன்.சிவஞானம் ராகவன் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலத்தில் தோற்றியவர்களில் அதிசிறந்த மாணவனாகத் திகழ்கின்றார்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஏழு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள்; பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளின் முழுமையான ஆய்வறிக்கை பின்னர் எடுத்துவரப்படும்.
பெயர் | பெறுபேறு | |
1. | தீபிகா நவரத்தினம் | 6A1B1C1S |
2. | சிவஞானம்ராகவன்(ஆங்கிலமொழி மூலம்) | 5A 2B 2C |
3. | தர்மலிங்கம் நாகறஞ்சன் | 5A2B1C1S |
4. | டிலானி கார்த்திகேசு | 5A2B1C1S |
5. | கோமளேஸ்வரன் பாலசயந்தன் | 4A2B2C1S |
6. | கனலிங்கம் வினோதன் | 3A3B2C |
7. | றோமிலா தேவராஜா | 3A3B1C |
No Responses to “க.பொ.த (சாதாரணம்) பரீட்சை, டிச.2013 பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன”