கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம் அவர்கள் தேவாரம் பாடி கடவுள் வணக்கத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த மேற்படி சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற சங்க யாப்பு விதிக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பொதுக் கூட்டத்தினை முன்னாள் கொழும்பு வலய ஆசிரிய ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமாகிய திரு. த. அம்பிகைபாகன் அவர்கள் தலைமை வகித்து வழிநடத்தியிருந்தார்.
முன்னாள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட அறுபதிற்கு மேற்பட்;ட சங்கத்தின் உறுப்பினர்கள் இக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். சங்கத்தின் நேச அமைப்பான கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள பல உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடவுள் வணக்கம், அக வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து அமரர் சங்கீதபூசணம் காரை ஆ. புண்ணியமூர்த்தி அவர்களினால் இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த ‘தாய் மலரடி பணிவோம்| எனத் தொடங்கும் கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டபோது சபையினர் எழுந்து நின்று பாடசாலை அன்னைக்கு வணக்கம் செலுத்தியிருந்தமை உணர்வுபூர்வமாக அமைந்து பள்ளிக்கால நினைவுகளை ஏற்படுத்தியது.
தலைவர் திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தமது தலைமை உரையில், அதிபர் ஆ.தியாகராசா காலத்தில் தான் கல்வி பயின்ற காலத்து நினைவுகளை மீட்டி உரையாற்றினார். மற்றும் தற்போதய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தமது மாணவி என்றும் கல்லுரியை வழிநடத்திச் செல்லும் அவரின் திறமையையும் பாராட்டிப் பேசினார். எமது பாடசாலை காரைநகரின் முதன்மைப் பாடசாலை என்றும் பழைய மாணவர்களாகிய நாம் எம்மலான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தலைவர் உரையைத் தொடர்ந்து செயலாளர் திரு. கனக சிவகுமாரன் அவர்கள் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் திருத்தங்களின்றி சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் கடந்த நிதியாண்டிற்குரிய வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்து அவ்வறிக்கை தொடர்பான விளக்கத்தினையும் சபைக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வறிக்கையும் சபையால் ஏகமனமகதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய நிர்வாக சபைத் தெரிவினை தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டடிருந்த சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் நடத்தி வைத்தார். நிர்வாக சபையில் உள்ள பதினொரு வெற்றிடங்களுக்கும் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மூன்று வாரங்களிற்கு முன்னர் விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது உப-தலைவர்இ ஒரு நிர்வாக உறுப்பினர் ஆகிய இரு பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு உறுப்பினர் வீதம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருப்பதாக தெரிவித்ததுடன் அவற்றின் விபரங்களையும் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இவ்விண்ணப்பங்கள் தொடர்பில் சபையிலிருந்து எவ்வித ஆட்சேபனையும் கிடைக்காமையினால் குறிப்பிட்ட பதவிகளிற்கு விண்ணப்பித்த அனைவரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. உப-தலைவர் ஒரு நிர்வாக உறுப்பினர் ஆகிய இருபதவிகளிற்குமான தெரிவும் பொதுச் சபையில் சமூகமளித்திருந்தவர்களின் சம்மதத்துடன் ஏகமனதாக இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து கணக்காய்வாளர் ஒருவரையும் மொன்றியல் ஒட்டாவா ஜக்கிய அமெரிக்கா ஆகிய பிரதேசங்களிற்கான இணைப்பாளர்களையும் போசகர் ஒருவரையும் பொதுச் சபை நியமனம் செய்திருந்தது.
தெரிவுகள் பூர்த்திசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைவராக தெரிவான திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களை உறுப்பினர்கள் கரவொலி செய்து தமது மகிழ்ச்சியினை தெரிவிக்க பதவியை எற்றுக்கொண்டு உரையாற்றினார்.
புதிய தலைவர் தனது உரையில் அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா அதிபராக இருந்த காலத்தில்; தான் பயின்ற இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது வகுப்பறைகள் கிடுகு கொட்டகைகளாக இருந்தன என்றும் அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா உள்ளுர் மக்களின் உதவியோடும் மலேசியாவில் வாழ்ந்த பழைய மாணவர்களின் உதவியோடும் புதிய கட்டிடங்கள் பலவற்றை நிறுவி கல்லூரி என்ற உயர் நிலைக்குக் கொண்டு வந்தார் என்றும் தெரிவித்தார்.
இப்பாடசாலையின் இன்றைய நிலையினைப் பல ஆண்டுகளாக பாhக்கின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தாம் அரச பதவியினையும் பதவி உயர்வுகளையும் பெறுவதற்கு காரணமாகவிருந்த இக்கல்லூரிமீது தமக்கிருக்கின்ற இனம்புரியாத பற்றே அதன் வளர்ச்சியில் பங்குகொள்ள தூண்டியது என்றார். பாடசாலையின் தற்போதய வசதிகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து தமது உரையில் விபரித்த இவர் அரச உதவிகள் கிடைக்கமுடியாத பாடசாலையின் உடனடி தேவைகள் அதிகம் இருப்பதாகத் தாய்ச் சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் எனவே உறுப்பினர்கள் முன்வந்து நன்கொடைகளை வழங்கி ஊக்கிவிக்வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடியதான தொழில்நுட்பம் சார்ந்த புதிய கல்வித் திட்டம் ஒன்று அரச கல்விப் பகுதியினால் அறிமுகப்படுத்தப்பட்டு அது சில பாடசாலைகளில் படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
இதனை இவ்வாண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எமது கல்லூரி தீவக வலயத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கல்வித்திட்டத்தினை மேற்கொள்ள மூன்று மாடிகொண்ட கட்டிடத்தினை எமது கல்லூரியில் நிர்மாணிப்பதற்கு மூன்று கோடி ரூபாவினை ஓதுக்குவதற்கு கல்விப்பகுதி தீர்மானித்துள்ளது. இக்கட்டிடத்தினை அமைப்பதற்கான காணி கல்லூரி வளாகத்தினுள் இல்லாதுள்ளதால் அண்மையாகவுள்ள தனியார் காணி ஒன்றினை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் தாய்ச் சங்க நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் பொருட்டு பெருந்தொகைப்பணம் தேவைப்படலாம் எனவும் இதற்கான உதவியினை எமது சங்கமும் வழங்கி உதவவேண்டும் என்பது தாய்ச் சங்க நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் தலைவரினால் பொதுச் சபைக்கு தெரியப்படுத்தப்பட்டபோது இது தொடர்பில் உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அதிபர் ஆசிரியர்கள் வழங்கக்கூடிய அர்ப்பணிப்பான சேவையும் பெற்றோர்இ பழைய மாணவர்கள் ஆகியோரின் அக்கறையுடனான பணி முன்னெடுப்புக்களும் இணைந்து பயணிக்கும்போது ஒரு பாடசாலையினை சிறந்ததாக மிளிரவைக்கமுடியும் என சங்கத்தின் போசகராக தெரிவுசெய்யப்பட்டிருந்த சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் தமது கருத்தினை கூறியிருந்தார்.
கல்வித்தரமேம்பாடு மற்றும் அதற்கான உதவிகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்திருந்த பயனுள்ள கருத்துக்கள்இ ஆலோசனைகள் என்பன நிர்வாகத்தின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டு சாத்தியமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
S. P. S. என கரைநகர் மக்களால் நன்கு அறியப்பட்ட அமரர் S. P. சுப்பிரமணியம் அவர்களின் மகன் திரு. அரிகரன் அவர்கள் தந்தையார் S. P. S. ஞாபகார்த்தமாக இருபத்தையாயிரம் ரூபாவினை எதிர்வரும் டிசம்பரில் க.பொ.த(சா-த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களில் மிகச் சிறந்த மாணவர்களிற்கு பகிர்ந்து வழங்கும்பொருட்டு வழங்க முன்வந்துள்ளதாக செயலாளரினால் பொதுச் சபைக்கு அறியத்தரப்பட்டது.
சங்கத்தின் யாப்பிற்கு சங்கத்தின் அலுவலக முகவரிஇ நிர்வாக சபை உறுப்பினர்களின் தெரிவு முறைஇ இணையத்தள நிர்வாகம் ஆகியன தொடர்பில் நிர்வாக சபையினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த திருத்தங்கள் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
சங்கத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னின்று உழைத்ததுடன் பொருளாளராகவும் பணியாற்றிய திரு.ஆ.சோதிநாதன் தனிப்பட்ட வேலைப்பழு காரணமாக இம்முறை நிர்வாகத்தில் இடம்பெறாது விடினும் அவரது கடந்த கால சிறப்பான சேவையினை செயலாளர் கனக.சிவகுமாரன் வெகுவாகப் பாராட்டிப் பேசியிருந்தபோது உறுப்பினர்கள் கரவொலி செய்து அங்கீகரித்திருந்தனர்.
பயனுள்ள பல கருத்துகள் பரிமாறப்பட்ட இந்தப் பொதுச் சபைக் கூட்டம் கல்லூரி வளர்ச்சியில் தொடர்ந்து உறுதியாக உழைப்போம் என்ற நம்பிக்கையுடன் இனிதே நிறைவு பெற்றது.
இந்த பொதுச் சபைக் கூட்ட நடவடிக்கைகளின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “சிறப்பாக நடைபெற்ற பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்”