13ஆண்டுக் கல்வித் திட்டத்தின் கீழ் காரை.இந்துவில் திறன் வகுப்பறைகள்(Smart Classrooms) இரண்டினைக் கொண்ட கட்டிடம் அமைப்பதற்கு மத்திய கல்வி அமைச்சினால் ஐம்பது மூன்று இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் கொள்முதல்செய்யப்பட்டதும் பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் உள்ளதுமான காணியில் அமையவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை(08-03-2019) காலை 9.45மணி முதல் 10.45மணிவரையுள்ள சுபநேரத்தில் நடைபெறவுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஓய்வுநிலை அதிபர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைக்கவுள்ளனர்.
க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்கள் தொழில் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும்வகையில் இரண்டு ஆண்டுகளுக்கான தொழில் பயிற்சி கற்கை நெறி வகுப்புக்கள், நிர்மாணிக்கப்படவுள்ள திறன் வகுப்பறைகளில் நடாத்தப்படவுள்ளது. காரைநகர் கல்விக் கோட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களையும் இக்கற்கைநெறி வகுப்புக்களில் இணைத்துக்கொள்ளும் வகையில் மையப் பாடசாலையாக காரை.இந்து தெரிவுசெய்யப்பட்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
No Responses to “திறன் வகுப்பறைகள்(Smart Classrooms) நிர்மாணிப்பதற்கான அடிக்கால் நாட்டும் வைபவம்.”