புதிய மாணவர்களை பாடசாலை சாரணர் பிரிவில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு அண்மையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
சாரணிய அமைப்பின் உன்னதமான நோக்கங்களை புரிந்துகொண்டு பல மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சாரணர்களாக இணைந்து கொண்டு தமது சேவையினை வழங்க முன்வந்திருந்தனர்.
சாரணர் அமைப்பில் இணைந்து கொள்ளும்போது அதன் விதிகளிற்கு அமைவாக பின்பற்றப்பட்டுவருகின்ற நடைமுறைச் செயற்பாடுகளை இந்நிகழ்வில் கலந்துகொண்ட சாரணர் அமைப்பின் பருத்தித்துறை மாவட்ட ஆணையாளர் திரு.சண்முகலிங்கம் காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் திரு.சற்குணராசர் காங்கேசன்துறை மாவட்ட முன்னாள் ஆணையாளர் திரு இரவீந்திரன் ஆகியோர் முன்னின்று நிறைவேற்றி வைத்ததைத்தொடர்ந்து பாடசாலையின் புதிய சாரணர் பிரிவு செயற்பட ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் சாரணர் பிரிவுப் பொறுப்பாசிரியர்கள் திரு.என்.கேதாரநாதன் திரு.எம்.ஜெயானந்தன் ஆகியோர் பாராட்டும்படியாக அதனை சிறப்பான முறையில் நெறிப்படுத்தி வருகின்றமையை அறியக்கூடியதாகவுள்ளது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “கல்லூரியின் ஆண்கள் சாரணர் பிரிவிற்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் மாவட்ட ஆணையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்”