காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 7வது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு 733, Birchmount Road (Birchmount & Eglinton) என்ற முகவரியில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் உறுப்பினர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் சென்ற ஆண்டுப் பணிகள் குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்த கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டு இக்கூட்டத்தினை பயனுடையதாக அமைத்துக்கொள்வதற்கு உதவுமாறு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகம் அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.
இதுவரை சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளாதிருக்கின்ற பழைய மாணவர்கள் உறுப்புரிமையைப்பெற்றுக்கொண்டு கல்லூரியின் வளர்ச்சியில் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதுடன்; உறுப்புரிமைப் பணத்தினை செலுத்த தவறிய உறுப்பினர்கள் நிலுவைப் பணத்துடன் இவ்வாண்டுக்குரியதுமான உறுப்புரிமைப் பணத்தினையும் செலுத்தி உதவுமாறு தயவாக வேண்டிக்கொள்கின்றோம்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்ற ஆண்டுக்குரிய செயற்பாட்டு அறிக்கையும் வரவு-செலவு அறிக்கையும் கூட்டத்திற்கு முன்னதாக கிடைக்கச்செய்யப்படும். எவருக்காவது இவ் அறிக்கைகள் கூட்டத்திற்கு முன்னதாகக் கிடைக்கவில்லையாயின் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டால் உடன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரலுடனான அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 7வது ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்”