‘உனக்கு நீயே உண்மையாய் இரு’
காரைநகர் இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் – கனடா
ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.
இடம்: 400, McLevin Avenue, Scarborough. M1B 5J4 என்ற முகவரியில் உள்ள விருந்தினர் மண்டபம் (Basement)
காலம்: 2024 யூன் 08ஆம் திகதி சனிக்கிழமை.
நேரம்: முற்பகல் 9.30மணி
தலைமை: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்கள்
நிகழ்ச்சி நிரல்
1.கடவுள் வணக்கம், அக வணக்கம்
2.பாடசாலைப் பண் இசைத்தல்
3.தலைவர் முன்னுரை
4.சென்ற ஆண்டுப் பொதுக் கூட்டஅறிக்கை சமர்ப்பித்தலும் அங்கீகாரமும்.
5. 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளுக்குரிய செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தலும் அங்கீகாரமும்.
6. 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளுக்குரிய வரவு–செலவு அறிக்கைகள் சமர்ப்பித்தலும் அங்கீகாரமும்.
7.புதிய நிர்வாக சபை தெரிவு: தலைவர், உப-தலைவர், செயலாளர், உதவிச் செயலாளர், பொருளாளர், உதவிப் பொருளாளர் ஆகிய உத்தியோகத்தர்களும் ஜந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் விண்ணப்பித்தோர் மத்தியிலிருந்தும் விண்ணப்பம் கிடைக்கப்பெறாத பதவிகளிற்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்கள் மத்தியிலிருந்தும் தெரிவுசெய்யப்படுவர்.
நிர்வாக சபை தெரிவுமுறை தொடர்பான விபரம் தனியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
8;.போசகர், கணக்காய்வாளர் ஆகியோரின் தெரிவு
9.புதிய தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உரையாற்றுதல்
10.அ)உறுப்பினர் பிரேரணைகள்: ஆ)யாப்புக்கான திருத்தப் பிரேரணைகள்
11.வேறுவிடயங்கள்
12.அங்கத்தவர் கருத்துரைகள்
13.நன்றியுரையும் கூட்டத்தின் நிறைவும்.
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
தொலைபேசி: 647-236-1170
உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு தயவாக வேண்டுகின்றோம்.
சி.சச்சிதானந்தன் நா.குஞ்சிதபாதம் திருமதி பிரபா ரவிச்சந்திரன்
பதில் செயலாளர் தலைவர் பொருளாளர்
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.”