காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபையைத் தெரிவுசெய்வதற்கான ஈராண்டுப் பொதுக் கூட்டம் இன்று ஸ்காபுரோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் தலைமையிலான ஒன்பது பேர்கொண்டகொண்ட புதிய நிர்வாக சபை அடுத்த இரு ஆண்டுகளிற்கு பதவி வகிக்கும் பொருட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள திரு.சிவராமலிங்கம் அவர்கள் சமூக அக்கறையும் ஊர்ப்பற்றும் மிக்க பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்பதுடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னைய நிர்வாக சபையிலும் திட்டமிடல் போசகர் சபையிலும் இடம்பெற்று காரை.மண்ணினிற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு அக்கறையுடன் உழைத்து வந்தவர்..அந்த வகையில் அனுபவமும், ஆற்றலும், ஆளுமையும் மிக்க திரு. சிவராமலிங்கம் தலைமையில் அமையப் பெற்றுள்ள நிர்வாக சபையானது காரை.மண்ணின் நலத் திட்டங்களையும் மன்றத்தின் வருடாந்த நிகழ்ச்சித் திட்டங்களையும் வகுத்து சிறந்தமுறையில் பணியாற்றும் என நம்பும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் எமது சங்கத்திற்கும் இடையேயான நல்லுறவு வலுப்பெற்று மேம்பட்டு விளங்க ஒத்துழைக்கும் எனவும் நம்புகின்றது. இத்தருணத்தில் இப்புதிய நிர்வாகத்தினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறது.
திரு.சிவராமலிங்கம் அவர்களும் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள திரு.ஆறுமுகம் சின்னத்தம்பி அவர்களும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொருளாளராக திருமதி இந்திராதேவி ஜெயானந்தன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒன்பது பேர்கொண்டபேர்கொண்ட நிர்வாக சபை அமையப்பெற்றதுடன் திட்டமிடல் போசகர் சபையில் முன்னர் பதவி வகித்த ஐவரும் தொடர்ந்து பதவி வகிக்க பொதுச் சபை அங்கீகரித்தது.
No Responses to “திரு.சிவராமலிங்கம் சிவசுப்பிரமணியம் தலைமையில் அமைந்துள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது”