தமிழ், சமயம், சமூகம, அரசியல் என யாவற்றிலும் தடங்கள் பல பதித்த பனமுகப் பணியாளரும் சாதனையாளன் என்கின்ற பெயருக்குரியவராகவும் விளங்கி தான் கற்ற பாடசாலையான காரை.இந்துவிற்கு பெரும் புகழ் சேர்த்தவர் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள். முத்து விழாக் கண்டு லண்டனில் வசித்துக்கொண்டு தளாராது பணியாற்றி வருகின்ற திரு.சம்பந்தன் அவர்கள் தன்னிடம் இருந்த மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய பெறுமதி மிக்க 244 நூல்களை காரை.இந்துவின் நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
கல்லூரியின் தேவையை அறிந்து இவர் செய்த உதவியினையும், இவரது பாடசாலை மீதான விசுவாசத்தினையும கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பாராட்டி நன்றியினையும் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்துளார்.; இதேவேளை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இவரது முன்னுதாரணமான இச்செயற்பாட்டினைப் பாராட்டி நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.
No Responses to “கல்லூரியின் மூத்த பழைய மாணவன் ஐ.தி.சம்பந்தனின் முன்னுதாரணமான செயற்பாடு”