அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது மகிழ்ச்சியினையும் பாராட்டினையும் கனடாக் கிளைக்குத் தெரிவிக்கிறார்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த (சா-த) வகுப்பில் பயிலும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ள க.பொ.த.(சா-த) பரீட்சைக்கு தோற்ற இருப்பவர்களுமான 56 மாணவர்களிற்கும் முக்கிய பாடங்களில் பாடசாலை வேளை தவிர்ந்த நேரத்தில் மேலதிக வகுப்புகள் வழமைபோல இவ்வாண்டும் கல்லூரி நிர்வாகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னதாக காலை ஏழு மணி தொடக்கமும்;; பாடசாலை முடிவடைந்த பின்னர் பிற்பகல் 2.30 மணி தொடக்கமும் வாரநாட்களில் இம்மேலதிக வகுப்புகள் கடந்த ஆண்டு போல இவ்வாண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து சேவை உணர்வுடன் இம்மேலதிக வகுப்புகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றமையும் கல்லூரி அதிபரும் இவ்வகுப்புகளை நெறிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Pic
இம்மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்ளும் பொருட்டு மாணவர்கள் காலையில் எழுந்தவுடன்; அவசரமாக வீட்டிலிருந்து புறப்படவேண்டியிருப்பதால் காலை உணவினை அருந்தக்கூடிய வாய்ப்பு இல்லாதுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மாணவர்களிற்கு ஏற்படக்கூடிய சோர்வை நீக்கி உற்சாகமாக கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்வகையில் தேநீருடன் சிற்றுண்டி வகைகள் இம்மாணவர்களிற்கு வழங்கப்பட்டுவருகின்றன.
தாய்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தேநீரும் சிற்றுண்டிகளும் வழங்குவதற்கு ஏற்படக்கூடிய செலவினை ஈடுசெய்யக்கூடிய நிதி அநுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்;.
இவ்வாறு ஆண்டுதோறும் கல்லூரி நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வரும் க.பொ.த (சா-த) மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளின் பயனாக ஆண்டுதோறும் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர வகுப்பில் கற்கத் தகுதியான மாணவர்களின் சதவீதமும் பாட ரீதியாகச் சித்தியடைந்தோர் சதவீதமும் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
No Responses to “க.பொ.த (சா-த) மேலதிக வகுப்பு மாணவர்களுக்கு இவ்வாண்டு கனடாக் கிளை சிற்றுண்டி, தேநீர் வழங்க முன்வந்துள்ளது”