காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் –கனடா உறுப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பம்
சங்கத்தின் உறுப்பினர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுவர்.
1.சாதாரண உறுப்பினர்கள் (Ordinary Members)
2.ஆயுட்கால உறப்பினர்கள்(Life Time Members)
3.இணை உறுப்பினர்கள்(Associate Members)
கனடாவிலும் ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் அனைத்துப் பழைய மாணவர்களும் முன்னாள் ஆசிரியர்களும் கல்லூரியில் கடமையாற்றிய ஏனைய அலுவலர்களும் பழையமாணவர் சங்கத்தில் சாதாரண உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளத் தகமையுடையவர்களாவர்.
இவர்களுக்கான ஆண்டுச் சந்தா $10.00 கனேடிய டொலர்களாகும். பத்து ஆண்டுகளுக்குரிய சந்தா $100.00 டொலர்களை ஒரே தடவையில் செலுத்துவதன் மூலம் ஆயுட் கால உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
மேற்குறித்த இரு நாடுகளையும் இலங்கையையும் தவிர்த்து ஏனைய நாடுகளில் வதியும் பழைய மாணவர்கள்இ முன்னாள் ஆசிரியர்கள் கல்லூரியில் பணியாற்றிய ஏனைய அலுவலர்கள் ஆகியோரும் அவர்களதும் மற்றும் கனடா ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலும் வதியும் பழைய மாணவர்களதும் வாழ்க்கைத் துணைகள் மற்றும் பிள்ளைகளும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளைக் கொண்ட(விபரங்களுக்கு சங்க யாப்பினை பார்வையிடவும்) இணை உறுப்பினர்களாக இணைந்து கொள்ள விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கான சந்தாப் பணம் சாதாரண உறுப்பினர்களுக்குரியது போன்றே ஆண்டொன்றுக்கு $10.00 கனேடிய டொலர்களாகவும் ஆயுட்கால சந்தா $100.00 கனேடிய டொலர்களாகவும் இருக்கும்.
உறுப்புரிமை பெறவிரும்புவோர் கீழேயுள்ள இணைப்பினை அழுத்தி விண்ணப்பப் படிவத்தின் அச்சுப் பிரதியினைப் பெற்றுப் பூர்த்தி செய்தபின்னர்
J/Karainagar Hindu College Old Students Association – Canada
3875 Sheppard Avenue, Apt # 411, Scarborough ON. M1T 3L6
என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பப் படிவத்துடன் உரிய சந்தாவுக்கான தொகையினை காசோலை/காசுக்கட்டளை/ வங்கி உண்டியல் (Bank Draft) J/Karainagar Hindu College Old Students Association-Canada என்கின்ற பெயருக்கு எழுதப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும். அல்லது
TD Bank Account No; 5238995 Branch No;00329 என்கின்ற சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின்னர் (416)804-0587 அல்லது (416)312-3061 என்ற தொலைபேசி எண்ணினை அழைத்தோ அல்லது karaihinducanada@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ வைப்பிலிட்ட விபரத்தை அறியத்தரவும். இம்மின்னஞ்சல் ஊடாக E-Transfer செய்தும் அனுப்பிவைக்கலாம்.
கடன் அட்டைகளைப் பயன்படுத்தி Pay Pal ஊடாகவும் உறுப்புரிமைப் பணத்தினை இலகுவாகச் செலுத்திக் கொள்ளமுடியும். இவ்விதம் செலுத்த விரும்பும் புதிய அங்கத்தவர்கள் தமது பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தினை Scan செய்தபின்னர் சங்கத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
சங்க நிர்வாக சபை உறுப்பினர் எவரையாவது நேரடியாக அணுகுவதன் மூலமும் சங்க உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.
பழைய மாணவர்களும் அவர்களைச் சார்ந்தோரும் உறுப்பினர்களாக இணைந்துகொண்டு வழங்குகின்ற ஆதரவும் ஒத்துழைப்பும் மட்டுமே சங்கத்தின் இலக்கினை அடைவதற்கான வெற்றியின் அடிப்படை என்பதால் நீங்கள் ஒவ்வொருவரும் உறுப்பினராக இணைந்துகொண்டு எமது கல்லூரியின் மேம்பாட்டில் பங்கேற்குமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கின்றோம்.
PDF வடிவிலான சங்க உறுப்புரிமைக்கான விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்ய இங்கே (Click)அழுத்தவும்.