பாடசாலைப் பண்
பல்லவி
இராகம் – மிலஹரி
தாய் மலரடி பணிவோம் நம் கல்லூரி
தமிழ் எனும் அமுதினை பருகிட நிலை கொண்ட (தாய்..)
அனுபல்லவி
உவமையிலாதோர் உமையவள் ஞானத்தை
உண்டருள் மதலையின் உயர் பெயர் தாங்கும் நம் (தாய்..)
சரணம்
இராகம் – பூபாளம்
அன்றொரு நாட்பல வாண்டுகளின் முன்னர்
அன்புரு நெஞ்சினன் ஆய சயம்புவின்
சிந்தனையின் தவயோகப் பொருளுருவில்
வந்தனை நம்தம்மை வாழ்விக்க மகிழ்வோடு (தாய்..)
இராகம் – அடானா
இன்னிசை யனிந்தனம் பொன்னினம் செல்வியை
இன்தமிழ் சாபையின் ஏந்திழை அம்மையை
கற்பனைத் தேனியை காவிய ரசத்தினை
அற்புதத்தேவியை ஆவியைக் கருணையின் (தாய்..)
இராகம் – சண்முகப்பிரியா
இயலிசை யாயினை பலவித கலைகளும்
ஏந்தியவாணியை விஞ்ஞான சக்தியை
பேணிய பெருந்தவப்பேற்றினை யூற்றினை
மானியல் தமிழ் பாவாய் வாழ்த்துவம் எங்கள் (தாய்..)
கல்லூரியின் இசை ஆசிரியர்களின் குரலில் கல்லூரிப் பண்
கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த “தாய் மலரடி பணிவோம்” என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண்ணை இங்கே அழுத்திக் கேட்கலாம்.
கல்லூரி மகுட வாக்கியம்
உனக்கு நீயே உண்மையா இரு